பிரான்சில் ஆசிரியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
அவரது குடும்பத்தினருக்கும் பிரான்ஸ் மக்களுக்கும் எங்களது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். எந்தவொரு காரணத்திற்காகவும் அல்லது எந்த சூழ்நிலையிலும் பயங்கரவாத செயலை நியாயப்படுத்த முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் குறித்த கேலிச் சித்திரங்களை மாணவர்களிடத்தில் காட்டி ‘பேச்சு, கருத்து சுதந்திரம்’ பற்றி வகுப்பறையில் விவாதம் நடத்திய பிரான்ஸின் வரலாற்று ஆசிரியர் ஒருவர் பாடசாலைக்கு வெளியே கொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் பிரான்ஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் பொலிஸாரால் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.