மும்பையில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. சில நாட்கள் 500-க்கும் குறைவாகவே பாதிப்பு இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நகரில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென ஆயிரத்தை தாண்டியிருந்தது.
இந்தநிலையில் நேற்றும் நகரில் 1, 092 பேர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 74 ஆயிரத்து 572 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல நகரில் மேலும் 17 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதனால் நோய் தொற்றுக்கு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 654 ஆக உயர்ந்து உள்ளது.
மும்பையில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 509 பேர் (92 சதவீதம் பேர்) வைரஸ் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர். தற்போது நகரில் 9 ஆயிரத்து 325 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல தாராவியில் நேற்று புதிதாக 10 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 640 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது அங்கு 15 பேர் நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மும்பையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து இருப்பது மக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா பாதிப்பு 1,000-யை தாண்டியது
- Master Admin
- 22 November 2020
- (538)

தொடர்புடைய செய்திகள்
- 20 November 2020
- (656)
கேரளாவில் இன்று 6,028 பேருக்கு கொரோனா
- 29 April 2021
- (703)
ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெல்லாட்ட...
- 23 April 2021
- (361)
கொரோனா பரவல் எதிரொலி - உயர்மட்டக் குழுவு...
யாழ் ஓசை செய்திகள்
நாடு முழுவதும் ஏற்பட்ட மின் தடை : வெளியானது உண்மை காரணம்
- 24 April 2025
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
- 24 April 2025
யாழில் இளம் குடும்பஸ்தர் திடீரென உயிரிழப்பு
- 24 April 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.