இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 8,380 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுவரை கொரோனாவால் 1,73763ஆக இருந்த மொத்த பாதிப்பட்டோர் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வடைந்துள்ளது. அதேநேரம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,971லிருந்து 5,164ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் இந்தியாவில் 193 நோயாளிகள் உயிரிழந்ததை தொடர்ந்து கொரோனா நோய்க்காரணமாக மொத்த இறப்புக்களின் எண்ணிக்கை 5,000ஐ தாண்டி இருப்பதாகவும் 86,984 பேர் இதுவரை குணமடைந்து வீடுதிரும்பி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 8,000 ஐத் தாண்டியது இதுவே முதல் முறை எனவும் கூறப்படுகிறது.