ஜோதிட சாஸ்த்திரன்படி, அக்டோபர் 15ஆம் தேதியான இன்றைய தினம் சிறப்பு வானியல் நிகழ்வு ஒன்று நடக்கவுள்ளது.

புதன்- குருபகவான் இருவரும் 108 டிகிரி கோணத்தில் சந்தித்து கொள்ளவுள்ளதால் மங்களம் உண்டாகவுள்ளது. இந்த யோகமானது இன்றைய தினம் பிரம்மமுகூர்த்தத்தில் நடந்து முடிந்துள்ளது.

அதிகாலை 3:03 மணிக்கு நடந்த இந்த பெயர்ச்சியால் தீபாவளி தினம் வரை குறிப்பிட்ட சில ராசிகளின் வாழ்க்கையில் நல்லதே நடக்கவுள்ளது.

அந்த வகையில், இன்று நடந்த பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகத்தை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.   

கோடீஸ்வர யோகத்தை கொட்டிக் கொடுக்கும் குரு பெயர்ச்சி- எந்த ராசிக்கு ஜாக்பாட்? | Tridashansh Yog Benefits 3 Zodiac Signs Oct 15Th

ரிஷபம் திரிதசாஞ்ச யோகம் ரிஷப ராசியினருக்கு இன்று முதல் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும். அதே சமயம் புத்திசாலித்தனத்தை கொண்டு வந்து தரும் புதன் பகவானும் இணைவதால் பேச்சு திறமை அதிகமாகும். பகுத்தறிவு உள்ளவர்களாக இருக்கும் இவர்களிடம் செல்வம் இன்று முதல் அதிகரிக்கும். வாய்ப்புகள் மற்றும் முதலீடுகள் அதிகமாக வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே நீங்கள் முதலீடு செய்திருந்த பணத்தில் இருந்து வருமானம் கிடைக்கவுள்ளது. 
கடகம்  கடக ராசியில் பிறந்தவர்களுக்கு புதன்- குரு பெயர்ச்சியால் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். புதிய திட்டங்கள், முடிவு இந்த காலப்பகுதியில் தாராளமாக எடுக்கலாம். இன்று முதல் வரும் பிரச்சினைகள் நாளடைவில் சரியாகி விடும். அதற்காக நீங்கள் எதுவும் செய்ய வேண்டிய தேவை இருக்காது. கல்வி, எழுத்து, மேலாண்மைத்துறையில் இருப்பவர்களுக்கு பதவி முன்னேற்றம் கிடைக்கும். 
 தனுசு தனுசு ராசிக்கு குரு பகவான் திரிதசாஞ்ச யோகத்தை வைத்து சிறப்பான பலன்களை கொடுக்கப்போகிறார். தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். சுப செய்திகள் உங்கள் வீடு தேடி வர வாய்ப்பு உள்ளது. திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். புதிதாக வீடு, வாகனம், சொத்து வாங்க திட்டமிடுபவர்களுக்கு சாதகமான செய்திகள் வர வாய்ப்பு உள்ளது.