ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரதமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, விசேட திறமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில், பிறந்த ஆண்கள் ஒரு சகோதரனாக தங்களின் கடமைகளையும் பொறுப்புக்களையும் சரியான முறையில் நிறைவேற்ற வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர்களாக இருப்பார்களாம்.
அப்படி தங்களின் உடன் பிறப்புகளுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் ஆண் ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்
கடக ராசியில் பிற்தவர்கள் மற்ற ராசிகளுடன் ஒப்பிடுகையில் மிகுந்த அன்பு கொண்டவர்களாக இருப்பார்களாம். இவர்கள் உடன் பிறந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
இந்த ராசி ஆண்கள் ஒரு சகோதரனாக தங்களின் உடன் பிறந்தவர்களின் ஆசையை நிறைவேற்றி வைக்க தங்களின் ஆசைகளை தியாகம் செய்யவும் தயாராக இருப்பார்கள்
தங்களின் உடன்பிறப்புகள் நேசிக்கப்படுவதையும் போற்றப்படுவதையும் இந்த ராசியினர் அதிகம் விரும்புகின்றார்கள். இவர்கள் உடன் பிறப்புக்காக வாழ்க்கை துணையை இழக்கவும் தயங்குவது கிடையாது.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே நீதிக்கும் நேர்மைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.
அன்பின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசியினர் தங்களின் அன்புக்குரியவர்களை பாதுகாப்பதை தங்களின் தவையாய கடமையாகக் கருதுகிறார்கள்.
இந்த ராசியினர் எந்த உறவாக இருந்தாலும் அதற்கு உண்டான அத்தனை மதிப்பையும் மரியாதையையும் கொடுப்பார்கள். இவர்களை சகோதரனாக பெருவதே பெரும் அதிர்ஷ்டம்.
துலாம்
துலாம் ராசி சகோதரர்கள் தங்களின் உடன் பிறப்புகளுக்காகவே தங்களின் வாழ்வில் பாதி நாட்களை அர்ப்பணிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
ரிஷப ராசிக்காரர்களைப் போலவே சுக்கிரனால் ஆளப்படும் இவர்களும் வாழ்வில் அன்புக்கும் பாசத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
இவர்களின் இந்த குணம் உடன் பிறப்புகள் மீது அதீத பாசம் வைக்க முக்கிய காரணமாக இருக்கும்.இவர்கள் பாசம் வைப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள்.