ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடை ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, திருமணம், காதல், பொருளாதாரம், விசேட திறமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே காதல் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்களாம். இவர்களின் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு பஞ்சமே இருக்காதாம்.

அப்படி காதல் வாழ்வில் அதிகமான மகிச்சியையும் அனுபவிக்கும் அதிர்ஷ்டம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

அன்பின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசியினர் இயற்கையாகவே காதல் மற்றும் திருமணத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் இயல்பாகவே மென்மையான குணம் கொண்டவர்காளாக இருப்பதால், உறவுகளிடத்தில் மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் விசுவாசம் மற்றும் நேர்மை இவர்களின் காதல் வாழ்க்கையை சிறப்பானதாக மாற்றும்.
இவர்களின் தனித்துவமான குணாதிசயங்கள் அவர்களை கிட்டதட்ட அனைத்து ராசிகளுடனும் இணக்கமானவர்களாக மாற்றுகிறது.இதனால் இவர்கள் எந்த ராசியினரிடம் காதல் கொண்டாலும், வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
கடகம்

கடக ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே கருணை உள்ளம் கொண்டவர்களாக இருப்பதால், தங்களின் துணையையும் சிறப்பாக கையாளும் குணம் இவர்களிடம் நிச்சம் இருக்கும்.
இந்த ராசியினர் ஒருவர் மீது அன்பு வைத்துவிட்டால் அவர்களுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பார்கள்.
இந்த ராசிகளின் சக்திவாய்ந்த உள்ளுணர்வு அவர்களை தங்கள் துணையின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள அனுமதிப்பதால் காதல் வாழ்க்கை சுவாரஸ்யமான அனுபவங்கள் நிறைந்ததாக இருக்கின்றது.
துலாம்

துலாம் ராசிக்காரர்களின் ராஜதந்திர மற்றும் நேர்மையான இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.அவர்கள் தங்கள் துணையின் தேவைகள் மற்றும் விருப்பங்களில் அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் காதலை மற்றவர்களிடம் எதிர்பார்க்காமல் கொடுப்பவர்களாக இருப்பதால், இவர்களின் காதல் வாழ்க்கை மிகுந்த அன்பு நிறைந்ததாக இருக்கின்றது.
இவர்களின் இந்த எதிர்ப்பார்ப்பற்ற குணம், இந்த ராசியினரின் காதல் வாழ்க்கையை அதிக மகிழ்ச்சி நிறைந்ததாக மாற்றுகின்றது.
