ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ஒரு ராசியில் ஒரு மாத காலம் பயணிப்பார். இந்த சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாவார். மேலும் சூரியன் ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போதும், தமிழ் மாதங்கள் பிறக்கின்றன.
அந்த வகையில் தற்போது சூரியன் கன்னி ராசியில் உள்ளார். இதனால் புரட்டாசி மாதம் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சூரியன் வருகிற அக்டோபர் 17 ஆம் தேதி சுக்கிரனின் ராசியான துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார். துலாம் ராசியில் சூரியன் நுழைவதால் ஐப்பசி மாதம் பிறக்கப் போகிறது.
இந்த துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரியனின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதுவும் 3 ராசிக்காரர்கள் சூரியனின் அருளால் ஏராளமான நன்மைகளைப் பெறவுள்ளனர்.
இப்போது சூரிய பெயர்ச்சியால் பிறக்கும் ஐப்பசி மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் ஐப்பசி மாதத்தில் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பார்கள். எந்த ஒரு போட்டியிலும் வெற்றி பெறுவார்கள். ஒவ்வொரு வேலையையும் வெற்றிகரமாக முடிப்பார்கள். ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தால், அதிலிருந்து விடுவார்கள். நீண்ட காலமாக நடந்து வந்த நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். மொத்தத்தில் ஐப்பசி மாதம் நல்ல வெற்றியைத் தரும் மாதமாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் ஐப்பசி மாதத்தில் இந்த ராசிக்காரர்கள் தங்களின் பலத்தை கண்டறிவார்கள். உடன் பிறந்தவர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். பேச்சில் மட்டும் சற்று கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். ஊடகம், எழுத்து, தகவல் தொடர்பு போன்ற துறையில் இருப்பவர்களுக்கு இம்மாதம் சிறப்பாக இருக்கும். இந்த மாதத்தில் மேற்கொள்ளும் பயணங்கள் நல்ல ஆதாயங்களைத் தரும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
தனுசு
தனுசு ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் ஐப்பசி மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது. முக்கியமாக இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனை வெளிக்காட்டுவதோடு, பதவி உயர்வைப் பெறும் வாய்ப்புள்ளது. சிலருக்கு சம்பளத்தில் உயர்வு ஏற்படவும் வாய்ப்புள்ளது. நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.