வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது பொதுவானதே. இதில் பலரும் பல செல்லப்பிராணிகள் வளர்ப்பார்கள். குழந்தைகளுக்கு பூனை என்றால் மிகவும் பிடிக்கும்.
செல்லப்பிராணி வளர்ப்பதற்கான காரணம் பொதுவாக வீட்டில் நாம் தனிமையை உணரக்கூடாது என்பது தான். அதற்காக தான் வீட்டில் எல்லோரும் செல்ல பிராணிகளை வளர்ப்பார்கள்.
அப்படி இருக்கையில் வீட்டில் பனை வளர்ப்பதால் பல நன்மைகள் கிடைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றது. அப்படி பூனை வளர்த்தால் வரும் நன்மை பற்றி பார்க்கலாம்.
மன அழுத்தம் நீங்கும் | பூனை வளர்ப்பதால் மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தத்தை குறைத்திட முடியும். அத்துடன் விளையாடுகையில், அனைத்தையும் மறந்து மிகவும் ரிலாக்ஸாக உணர செய்வீர்கள் |
பிறரை சார்ந்து இருக்காது | பூனைகள் மிகவும் சுதந்திரமாக செயல்படக்கூடியது. அவற்றை எப்போதும் கவனிக்க வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது. உங்களது பிஸி லைப்ஸ்டைலுக்கான செல்லப்பிராணிக்கு பூனை சிறந்த தேர்வாகும். |
எலி, பூச்சி தொல்லை | வீட்டில் பூனை வளர்க்கும் பட்சத்தில், எலி மற்றும் பூச்சி தொல்லை குறித்த கவலை சுத்தமாக இருக்காது. வீட்டில் இருக்கும் பொருட்களுக்கு சிறந்த காவலனாக பூனை திகழக்கூடும். |
தனிமை உணர்வு மறையும் | பூனைகள் மிகவும் பாசமானவை மட்டுமல்லாது உணர்ச்சி ரீதியான பிணைப்பையும் கொண்டுள்ளது. மேலும், தனிமை உணர்வை போக்கவும் உதவுகிறது. |
அலர்ஜி | பூனையுடன் வளரும் குழந்தைகளுக்கு அலர்ஜி மற்றும் ஆஸ்துமா ஏற்படும் அபாயம் குறைந்து காணப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. |
மனநிலை மேம்படும் | பூனைகளின் விளையாட்டுத்தனமான செயல்கள், மனநிலையை மேம்படுத்த உதவக்கூடும். பூனையுடன் இருப்பது கவலையை மறக்கடிக்க செய்திடும். |
சுத்தமாக இருக்கும் | பூனைகளுக்கு ஈரமாக அல்லது அழுக்காக இருப்பது சுத்தமாக பிடிக்காது. மழை பெய்தால் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கவே விரும்பும். எனவே, வீட்டில் சுத்தத்தை விரும்புவோர் தாராளமாக பூனையை வளர்க்கலாம். |
அமைதியாக இருக்கும் | பூனை பசியெடுத்தால் மட்டுமே மியாவ் என கத்தக்கூடும். மற்றப்படி, மிகவும் அமைதியாக இருக்கும். வொர்க் ப்ரம் ஹோம் அல்லது தூங்கும் போது எவ்வித சத்தங்களும் வரக்கூடாது என நினைப்பவர்கள், செல்லப்பிராணியாக பூனையை வளர்க்கலாம். |