பொதுவாகவே ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாத நிலை, விசேட திறமைகள், தோற்றம் மற்றும் குணங்களில் நேடியான ஆதிக்கத்தை கொண்டிருக்கும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
12 ராசிகளில் எந்த ராசியில் பிறந்திருந்தாலும் அவர்களுக்கென சில நல்ல குணங்களும், அதே போல் சில எதிர்மறை குணங்களும் நிச்சயம் இருக்கும்.
இந்த ராசியினரிடம் வம்பு வச்சிக்காதிங்க... விளைவு ரொம்பவே மோசமா இருக்கும்!
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே யாராலும் தோற்கடிக்கவே முடியாத உடல் பலத்தையும், அறிவாற்றலையும் கொண்டவர்களாக இருப்பார்களாம். அப்படிப்பட்ட விசேட ஆளுமைகளுடன் பிறப்பெடுத்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசியில் பிறந்தவர்கள் தங்களின் மர்மமான இயல்புக்கும் கவர்ச்சிகரமான இருப்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசிக்காரர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், கேட்கவும், எல்லாவற்றிற்கும் மேலாக, யாரையும் எதிர்கவும் ஒருபோதும் தயங்குவதே கிடையாது.
மாற்றத்தின் கிரகமான புளூட்டோவால் ஆளப்படும் இந்த நீர் ராசியினர் தாங்கள் இருக்கும் இடத்தில் எந்த விடயத்தையும் மாற்றியடைக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் தோற்றம் மற்றும் ஆளுமை மற்றவர்களை அச்சுறுத்தும் வகையில் இருக்கும்.
சிம்மம்
சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசியினர் பிறப்பிலேயே யாராலும் தோற்கடிக்க முடியா ஆளுமை மற்றும் தலைமைத்துவ குணங்களுடன் இருப்பார்கள்.
இவர்கள் நுழையும் எந்த அறையிலும் பிரகாசமாக இருப்பார்கள். இவர்கள் யாராலும் புறக்கணிக்கவே முடியாத ஒரு காந்த ஆற்றலை வெளிப்படுத்துகின்றார்கள். இவர்ளை தோற்கடிப்பது மட்டுமல்ல புறக்கணிப்பதும் இயலாத காரியமாக இருக்கும்.
நெருப்பு ராசிகளாக, அவர்கள் தங்கள் இதயத்தை இலக்கை அடையும் வரையில் இரும்பு போல் உறுதியாக வைத்திருப்பார்கள்.
மேஷம்
சாப்பிட்டவுடன் செய்யவே கூடாத 5 செயல்கள்! என்னென்ன தெரியுமா?
மேஷ ராசியில் பிறந்தவர்கள் இயல்பிலேயே சிறந்த அறிவாற்றல் கொண்டவர்களாகவும், எந்த விடயத்தையும் பல கோணங்களில் ஆராயும் தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
மற்றவர்கள் தவறவிடும் விடயங்களிலும் கவனம் செலுத்தும் ஆளுமை இவர்களிடம் இயற்கையாகவே இருக்கும். இதனால் இந்த ராசியினரை எந்த விடயத்திலும் எளிமாக தோற்கடிக்கவே முடியாது.
சூழ்நிலைகளை நம்பிக்கை, திறன் மற்றும் தன்னம்பிக்கையுடன் கையாளும் இவர்களின் நிதானமான குணம் எதிரிகளை குழப்பத்தில் ஆழ்த்திவிடும் வல்லமை கொண்டதாக இருக்கும்.