ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது போன்று குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு அதிகமான எதிரிகள் இருப்பார்கள். இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் எதிரிகள் இருப்பார்கள்.
இது அவர்களின் குணங்கள் மற்றும் வாய் தகராறுகள் அல்லது வளர்ச்சி உள்ளிட்ட சந்தர்ப்பங்களினால் அவர்கள் உருவாகி இருக்கலாம். எதிரிகள் இல்லாமல் வாழும் மனிதர்கள் பெரும்பாலும் யாராவது ஏமாற்றிக் கொண்டு தான் இருப்பார்கள்.
தன்னுடைய வாழ்க்கையை வாழ நினைக்கும் ஒவ்வொருவருக்கும் அதிகமான எதிரிகள் இருப்பார்கள் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் தன்னுடைய நேர்மையான பேச்சு, தைரியமான அணுகுமுறை போன்ற காரணங்களால் அதிகமான எதிரிகளை சம்பாரித்து வைத்திருப்பார்கள்.
அந்த வகையில், எதிரிகளையும் மோதல்களையும் விரும்பும் ராசியினர்கள் யார் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.
மிதுனம் | மிதுன ராசியில் பிறந்தவர்கள் புத்திசாலித்தனமானவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் இரட்டை மனம் இருக்கும். இரு மனநிலைகள் மற்றும் மாறுபட்ட கருத்துக்களை பேசக்கூடிய இவர்கள் சில சமயங்களில் எதிரிகளை வளர்த்துக் கொள்வார்கள். தங்களின் கருத்துக்களை நேரத்திற்கு ஏற்றால் போன்று மாற்றிக் கொள்வார்கள். எதிரிகளும் இவர்களுக்கு இயல்பாகவே அதிகமாக இருப்பார்கள். |
சிம்மம் | சிம்ம ராசியில் பிறந்தவர்கள் தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். கம்பீரமாக இருக்கும் இவர்கள் தன்னுடைய ஆசைக்காக எந்தவொரு எல்லைக்கும் செல்வார்கள். இது பழக்கம் மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். தங்களுடைய கருத்துக்களை உறுதியாக வெளிப்படுத்தும் இவர்களுக்கு எதிரிகள் அதிகமாக இருப்பார்கள். தலைமைத்துவ பண்புகளை கொண்டிருப்பார்கள். பொறாமை காரணமாக நிறைய எதிரிகள் இருப்பார்கள். |
விருச்சிகம் | விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் உணர்ச்சவசப்படுவார்கள். ஆழமான எண்ணங்களையும் கொண்டிருக்கும் இவர்கள் மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு கட்டுபடுவார்கள். இந்த பழக்கம் சிலருக்கு அச்சுறுத்தலாக இருக்கும். தவறான புரிதல்கள் மற்றும் மோதல்கள் காரணமாக எதிரிகள் அதிகமாக இருப்பார்கள். உறுதியான மன நிலை கொண்ட இவர்கள் பழிவாங்கும் குணத்துடன் இருப்பார்கள். |