எண்கணித சாஸ்திரம் எனப்படுவது தொன்று தொட்டு புலக்கத்தில் இருக்கும் ஒரு பழங்கால சாஸ்திர முறை ஆகும்.
பொதுவாகவே நமது வாழ்வில் அனைத்து விடயங்களிலும் எண்கள் தொடர்புப்படுகின்றன. எண்களால் வாழ வைக்கவும் முடியும். அது போல் வீழ்த்தவும் முடியும்.
எண் கணித சாஸ்திரம் எனப்படுவது ஒருவர் பெயருக்கும், பிறந்த திகதி, மாதம், வருடம், பெயர் அனைத்தின் கூட்டுத்தொகையாக வரும் எண்ணுக்கும் அவர்களின் எதிர்கால வாழ்விற்கும் இடையில் உள்ள தொடர்பை கணித்து கூறுவதாகும்.
எண்களால் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என எண்கணித சாஸ்திரம் உறுதியாக கூறுகின்றது.
அந்த வகையி்ல் திருமணம் செய்யும் திகதியும் திருமண வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.
கல்யாணம் ஆயிரம் காலத்து பயிர் என நமது முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கின்றார்கள். காரணம் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை என்றால், அதன் பின்னர் அந்த வாழ்க்கை முழுவதும் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும்.
எண்கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில திகதிகளில் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அவை என்னென்ன திகதிகள் என்பது தொடர்பிலும் அதற்கான காணம் தொடர்பிலும் இந்த பதிவில் பார்க்கலாம்.
எண்கணிதத்தின் அடிப்படையில் 4, 13, 22, 31 ஆகிய திகதிகளில் திருமணம் செய்பவர்கள் வாழ்க்கையில் அதிக பிச்சினைகள் மற்றும் மணமுறிவை சந்திக்க வேண்டிய நிவை ஏற்படும் என்பதால் இந்த திகதிகளில் திரமணம் செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த திருமணம் செய்பவர்கள் எவ்வளவு காதலுடன் வாழ்ந்தாலும் 4 ஆண்டுகளுக்குள் பிரிந்து விடுவார்கள் என ஜோதிட மற்றும் எண்கணித சாஸ்திரத்தில் அடிப்படையில் நம்பப்படுகின்றது.
ஜோதிட நிபுணர்களின் கருத்துப்டி மூல எண் 7-ல் திருமணம் செய்வதும் திருப்திகரமான திருமண வாழ்வை கொடுக்காது. ஆகவே 7, 16, 25 ஆகிய திகதிகளில் திருமணம் செய்வதை தவிர்ப்பது சிறந்தது.
இந்த திகதிகளில் திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு வாழ்வில் ஒரு பிரச்சினை முடிய புது பிரச்சினைகள் ஆரம்பிக்கும் இது பெரும்பாலும் விவாகரத்துக்கு கொண்டுசெல்லும் என ஜோதிட நிர்ணர்கள் எச்சரிக்கின்றனர்.
இது போல் 8, 17, 26 ஆகிய திகதிகளில் திருமணம் செய்வதும் திருமண வாழ்க்கையில் அதிக பிரச்சினைகள் ஏற்பட வழிவகுக்கும். தம்பதிகளுக்கு இடையில் புரிந்துணர்வு இல்லாத நிலை ஏற்படும். அதனால் திருமண வாழ்க்கை விரையில் கசந்துவிடும்.
எண் கணிதத்தின் பிரகாரம் 5, 14, 23 ஆகிய திகதிகளில் திருமணம் செய்வதால், வாழ்க்கையில் சிறு குழப்பங்களை தொடர்ந்து சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இது பெரும்பாலும் அசுப பலன்களை மட்டுமே கொடுக்கும் எனவே திருமணம் செய்யும் போது திகதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். அப்போது தான் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி மற்றும் அமைதி நிறைந்ததாக இருக்கும்.