தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வரும் இவர் ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடந்து விவாகரத்து பெற்ற நிலையில் நான்கு மாதங்களுக்கு முன்னர் பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அவருடன் இரு வாரங்களுக்கு முன்னர் கோவா ட்ரிப் சென்றிருந்த வனிதா அங்கு பீட்டர் பால் குடித்து விட்டு தகராறு செய்தார். குடிக்கு அடிமையாகி விட்டார். அதிலிருந்து அவர்களை மீட்பது கடினமான ஒன்றாக உள்ளது என அவரைப் பிரிந்து விட்டார்.

பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் அவருடன் சேர்ந்து வாழ்ந்தால் அதை நான் தடுக்கப் போவதில்லை எனவும் கூறி இருந்தார்.

முதலில் வனிதா மற்றும் பீட்டர் பால் பிரிந்தது பற்றி தயாரிப்பாளர் ரவீந்திரன் தான் வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது மீரா மிதுன் ரவீந்திரனை விமர்சனம் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வனிதா விஜயகுமார் ஸ்ட்ராங்கான லேடி அவரைப்போல இன்னொரு பெண்மணியைப் பார்ப்பது கடினம்.

அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்து பேசி சமூக வலைதளங்களில் பதிவிடுவதில் உங்களுக்கு என்ன கிடைத்தது?? என பேசியுள்ளார்.

இதோ அந்த வீடியோ