நவராத்திரி விரதம் என்பது சக்தியை நோக்கி இருக்கும் இந்து சமய விரதங்களில் ஒன்று.
இந்த நாளில், பக்தர்கள் ஒன்பது நாட்கள் துர்கா தேவி மற்றும் அவரது ஒன்பது தெய்வீக அவதாரங்களை வழிபடுகிறார்கள்.
நவராத்திரி காலத்தில் முதல் மூன்று நாட்கள், வீரத்தை வேண்டி துர்க்கையை வழிபடுகின்றனர்.
அடுத்த மூன்று நாட்கள் செல்வத்தை வேண்டி இலட்சுமியையும், இறுதி மூன்று நாட்கள் கல்வி, கலைகளை வேண்டி கலைமகளையும் வழிபடுகின்றனர்.
இந்தக் காலகட்டத்தில் பக்தர்கள் இறைச்சி, தானியங்கள் போன்ற உணவுகளை தவிர்த்து பழங்கள், உலர் பழங்கள் போன்றவற்றை மட்டுமே சாப்பிடுகிறார்கள்.
விரதத்தை தாண்டி இது ஆரோக்கியத்தை அதிகரிப்பதும், மனநிலையை மற்றும் செரிமானத்தை மேம்படுத்தி உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கும்.
இந்நிலையில், நவராத்திரியின்போது கண்டிப்பாக சாப்பிட வேண்டிய 4 உணவுகள் பற்றி பார்க்கலாம்.
1. ராஜ்கிரா: உண்ணாவிரதத்தின் போது ராஜ்கிராவை உணவில் கண்டிப்பாக சேர்க்க வேண்டும். இரும்புச்சத்து நிறைந்துள்ள இது ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவுகிறது. மேலும், தலைமுடி, உடல் மற்றும் மன வலிமையை மேம்படுத்துகிறது.
2. முந்திரி: நவராத்திரி விரதத்தின் போது ஒரு கைப்பிடி முந்திரி சாப்பிடலாம். மெக்னீசியத்தின் சிறந்த மூலமான முந்திரி நரம்புகளை வலுப்படுத்த உதவுகிறது. மேலும், வயிற்று வலி, கால் வலி, வாயு பிரச்சனை போன்ற பிரச்சனைகளைப் போக்குகிறது.
3. வாழைப்பழம்: வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் B6 மாதவிடாய்க்கு முன்பு ஏற்படும் மார்பக வலியை போக்க உதவுகிறது. இதில் உள்ள ப்ரீபயாடிக் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
4. முளைகட்டிய பருப்பு வகை: நவராத்திரியின் போது முளைகட்டிய கொண்டைக்கடலை, பட்டாணி மற்றும் பீன்ஸ் ஆகியவற்றை உண்ணலாம். இதில் உள்ள புரோட்டீன் மற்றும் அமினோ அமிலங்கள் எலும்புகளை வலுப்படுத்துகின்றன.