ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவருடைய ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் இவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, காதல், திருமண வாழ்க்கை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை எதிர்மறை குணங்களில் நேரடி தாக்கத்தை கொண்டிக்கும் என நம்பப்படுகின்றது.
இந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே மற்றவர்களுடன் ஒப்பிடுகையில், அதிக துணிச்சலும், அசாத்திய தைரியமும் கொண்டவர்களாக இருப்பார்களாம்.
அடிப்படி பிறப்பிலேயே பெண் சிங்கம் போல் யாருக்கும் அஞ்சாதவர்களாகவும் தனித்துவமான ஆளுமையுடனும் திகழும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசி பெண்கள் இயல்பாகவே சாகச குணத்துக்கும் அச்சமற்ற தன்மைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பாரர்கள்.
இவர்களை போர் கிரகமான செவ்வாய் ஆளுவதால், சண்டையிடுவதற்கும் தங்களின் உரிமைகளுக்காக போராடுவதற்கும் ஒரு போதும் தயங்கவே மாட்டார்கள்.
இவர்கள் இயற்கையாகவே தலைவருக்குரிய குணத்துடன் பிறந்தவர்கள், மேலும் தைரியம் மற்றும் விரைவான முடிவெடுக்கும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும். இவர்களிடம் பிரச்சினைக்கு சென்றால் அவர்களுக்கு நரகத்தை காட்டும் வரை ஓயமாட்டார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் சின்னமே சிங்கத்தின் உருவத்தால் அடையாளப்படுத்தப்படுகின்றது. இந்த ராசி பெண்களின் துணிச்சல் பார்போரை வியப்பில் ஆழ்த்தும் வகையில் இருக்கும்.
சிம்ம ராசி பெண்கள் சூரியனால் ஆளப்படுவதபால், இயற்கையாகவே தலைமைத்துவ குணடும் அசாதாரன துணிச்சலும் இவர்களிடம் இருக்கும்.
இவர்களின் மன வலிமையைக் கொண்டு எந்த கடினமான காரியத்தையும் தனித்து நின்றே சாதிக்கக்கூடிய வலிமையை அவர்கள் கொண்டிருப்பார்கள். இந்த ராசி பெண்களிடம் மோதுவது மிகசுவும் ஆபத்தானது.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் மர்மமான குணத்துக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் போரின் கிரகமான செவ்வாய் மற்றும் மாற்றத்தின் கிரகமான புளூட்டோவால் ஆளப்படுவதால், இவர்களிடம் அசாத்திய துணிச்சல் இருக்கும்.
அவர்கள் எதற்கும் பயப்பட மாட்டார்கள். சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் வலிமை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசி பெண்களை பார்த்து ஆண்களே பயப்படும் வகையில் அவர்களின் ஆளுமை சிங்கத்துக்கு நிகரானதாக இருக்கும்.