மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சின்ன சன்னார் கிராமத்தில் இன்று (04) மதியம் வீடு ஒன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தந்தையான 27 வயதுடையவர் என தெரிய வந்துள்ளது.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சின்ன சன்னார் கிராமத்தில் இன்று (04) மதியம் 1:30 மணியளவில் வீடொன்றில் சுவரை இடித்து வேலை செய்து கொண்டிருந்த போது குறித்த வீட்டின் சுவர் முற்றாக இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் இடிபாட்டிற்குள் சிக்கி படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில் சிக்குண்டு சுவரின் இடிபாட்டில் இருந்து மீட்கப்பட்டு குறித்த இருவரும் உடனடியாக பள்ளமடு வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டனர்.
இதன் போது ஒரு பிள்ளையின் தந்தையான 27 வயதுடைய இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
மேலும் அவரது சகோதரன் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.