பொதுவாகவே பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி தங்களின் முக அழகை பாதுகாப்பதில், அதிக அக்கறை செலுத்துவது வழக்கம்.

தற்காலத்தில் அதிகரித்த சமூக ஊடகங்களின் பெருக்கம், அதிகரித்த வேலை பளு, துரித உணவுகளின் நுகர்வு அதிகரித்தமை போன்ற காரணங்களினால், மனஅழுத்தம் அதிகரித்துவிட்டது.

கண்களின் அழகை கெடுக்கும் கருவளையங்களை நிரந்தரமா நீக்கணுமா? இயற்கை முறையில் தீர்வு! | How To Get Rid Of Dark Circles Permanently Tips

அதனால் இரவில் சரியான தூக்கம் இன்றி உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் நிலை அதிகரித்துவிட்டது.

இது சரும பாதிப்புகளுக்கும் முக்கிய காரணமாக அமைகின்றது. குறிப்பாக போதிய தூக்கமின்மை காரணமாக கண்களுக்கு கீழ் கருவளையங்கள் தோன்றுகின்றது.

கண்களின் அழகை கெடுக்கும் கருவளையங்களை நிரந்தரமா நீக்கணுமா? இயற்கை முறையில் தீர்வு! | How To Get Rid Of Dark Circles Permanently Tips

கருவளையங்கள் பொதுவாக ஒரு கடுமையான உடல்நலப் பிரச்சினை அல்ல என்றாலும், பலர் தங்களை சோர்வாகவோ, வயதானவர்களாகவோ அல்லது ஆரோக்கியமற்றவர்களாகவோ காட்டுவதாக நினைக்கிறார்கள்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமா? உங்கள் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களை இயற்கை முறையில் எவ்வாறு விரைவில் நீக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கண்களின் அழகை கெடுக்கும் கருவளையங்களை நிரந்தரமா நீக்கணுமா? இயற்கை முறையில் தீர்வு! | How To Get Rid Of Dark Circles Permanently Tips

சோர்வு மற்றும் தூக்கமின்மை காரணமாகவே  கண்களுக்குக் கீழே கருவளையங்கள் ஏற்படுகின்றன. போதுமான உயர்தர தூக்கம் பெறுவது கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களை நிரந்தரமாக நீக்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றது. 

நாளொன்றுக்கு குறைந்தது 7 மணிநேரம் ஆழ்ந்த உறக்கம் அவசியம். இயற்கை முறையில் கண்களை சுற்றி தோன்றும் கருவளையங்களை நீக்க வேண்டும் என்றால், முதலில் சரியான முறையில் தூக்கத்தை நிர்வகிக்க வேண்டியது அவசியமாகின்றது.

வெள்ளரிக்காய்

கண்களின் அழகை கெடுக்கும் கருவளையங்களை நிரந்தரமா நீக்கணுமா? இயற்கை முறையில் தீர்வு! | How To Get Rid Of Dark Circles Permanently Tips

வெள்ளரிக்காய் துண்டுகளைப் பயன்படுத்துவது கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களை போக்குவதில் ஆற்றல் காட்டுகின்றது. தடிமனான வெள்ளரிக்காய் துண்டுகளை குளிர்வித்து, பின்னர் கருவளையங்களில் சுமார் 10 நிமிடங்கள் வைக்கவும். பின்னர் அந்த பகுதியை தண்ணீரில் கழுவவும். இந்த சிகிச்சையை ஒரு நாளைக்கு இரண்டு முறை தினசரி செய்து வந்தால் கருவளைய்கள் நிரந்தரமாக மறைந்துவிடும்.

பாதாம் எண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ

கண்களின் அழகை கெடுக்கும் கருவளையங்களை நிரந்தரமா நீக்கணுமா? இயற்கை முறையில் தீர்வு! | How To Get Rid Of Dark Circles Permanently Tips

இயற்கை சிகிச்சையை விரும்புபவர்களுக்கு பதாம் சிஙறந்த தெரிவாக இருக்கும். பாதாம் எண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றை சம அளவில் எடுத்து படுக்கைக்குச் செல்வதற்கு முன்னர் கண்களை சுற்றி மெதுவாக மசாஜ் செய்தால் கருவளைங்களில் விரைவில் மாற்றம் நிகழ்வதை கண்கூடாக பார்க்கலாம்.

தேநீர் பைகள்

கண்களின் அழகை கெடுக்கும் கருவளையங்களை நிரந்தரமா நீக்கணுமா? இயற்கை முறையில் தீர்வு! | How To Get Rid Of Dark Circles Permanently Tips

கண்களில் ஊறவைத்த தேநீர் பைகளைப் பயன்படுத்துவது, வீக்கத்தைக் குறைத்து, அந்தப் பகுதியை அமைதிப்படுத்துவதுடன் கண்களை சுற்றி காணப்படும் கருவளையங்களில் நல்ல மாற்றத்தை கொடுக்கும்.

இரண்டு தேநீர் பைகளை, வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து, பின்னர் குளிர்சாதன பெட்டியில் சில நிமிடங்கள் பைகளை குளிர்வித்து, கண்ணில் வைத்தால், கருவளையங்களில் நல்ல மாற்றத்தை காணலாம். 5 நிமிடங்களின் பின்னர், தேநீர் பைகளை அகற்றி, குளிர்ந்த நீரில் அந்தப் பகுதியைக் கழுவ வேண்டும் இவ்வாறு வாரத்திற்கு 3 முறை செய்தாலே கருவளையை நிரந்தரமாக போக்கலாம்.