ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களுக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது.
காரணம் கிரகங்களின் இடப்பெயர்ச்சி 12 ராசிகளிலும் குறிப்பிடதக்க அளவு சாதக,பாதக மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது.
இந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான ராசிபலன் கணிப்பில் அடிப்படையில் சில கிரக நிலைகளில் ஏற்படவுள்ள மாற்றங்களானது தைப்பொங்கல் தினத்தின் பின்னர் சில ராசியினருக்கு பாதக பலன்களை ஏற்படுத்தும்.
அப்படி பொங்லுக்கு பின்னர் வாழ்வில் பல்வேறு வகைகளிலும் துரதிஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தனுசு ராசி
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த ஆண்டில் பொங்லுக்கு பின்னரான காலகட்டம் சற்று உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும்.
தொழில் ரீதியில் பணிச்சுமை அதிகரிப்பதால், மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
பணப் பற்றாக்குறை அல்லது நிதி ரீதியில் பாரிய இழப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருப்பதால், இந்த ராசியினர் வீண் செலவுகளை தவிர்த்து பணத்தை சிக்கனமாக செலவிட வேண்டியது அவசியம்.
மிதுன ராசி
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு பெப்ரவரி மாதம் வாழ்வில் பல சிக்கல்களை ஏற்படுத்தக்கூடியதாக அமையும்.
குடும்பத்தில் உறவுகள் மத்தியில் சில பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம். திருமண வாழ்வில் சிக்கல்கள் அதிகரிக்கும்.
துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதால், வீட்டில் அமையற்ற நிலை உருவாகலாம். அதனால், இந்த காலகட்டத்தில் வார்த்தைகளை மிகவும் அவதானமாக பயன்படுத்த வேண்டும்.
இந்த நேரத்தில் கோபத்தை கட்டுப்படுத்துவதும் அவசர முடிவுகளை தவிர்த்து நிதானத்துடன் முடிவுகளை எடுக்க வேண்டியது முக்கியம்.
மகர ராசி
மகர ராசியினருக்கு பொங்கல் பண்டிகைக்கு பின்னரான காலம் வாழ்வில் பல சோதனைகளை கொடுக்கக்கூடிய சவால்கள் நிறைந்த காலகட்டமாக பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக மனதில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் நல்ல முடிவை எடுக்க முடியாத நிலை ஏற்படலாம்.
குடும்ப வாழ்விலும் மகிழ்சியற்ற நிலையால் மனம் விரக்தியான நிலை ஏற்படக்கூடும். இந்த நேரத்தில் கோபத்தில் முடிவெடுப்பதை தவிர்க்க வேண்டியது முக்கியம்.
நிதி நிலையும் திருப்திகரமாக இருக்காது. எனவே இந்த காலகட்டத்தை சரியாக புரிந்துக்கொண்டு சற்று பொறுமையுடன் கடக்க வேண்டியது அவசியம்.