வேத ஜோதிடத்தின் படி, புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றிற்கு அதிபதியாக புதன் இருக்கிறார். அத்துடன் மிதுனம், கன்னி ஆகிய ராசிகளின் அதிபதியாகவும் பார்க்கப்படுகிறார்.

அதே போன்று கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன், தன்னம்பிக்கை, மரியாதை, கௌரவம், அரசியல், அரசு வேலை, தந்தை ஆகியவற்றின் காரணியாக இருக்கிறார். அத்துடன் சிம்ம ராசியின் அதிபதியாகவும் இருக்கிறார்.

இப்படி இருக்கும் பட்சத்தில் புதன் கன்னி ராசியில் பயணிக்கவுள்ளார். இதனால் சூரியன்- புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதன் விளைவாக சக்தி வாய்ந்த புதாதித்ய ராஜயோகம் உருவாகும்.

யோகம் உருவாகிய பின்னர், அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். ஆனாலும் குறிப்பிட்ட ராசிகளுக்கு மாத்திரம் அதிர்ஷ்டம் கிடைக்கவுள்ளது.

அந்த வகையில், சூரியன் - புதன் சேர்க்கையால் கிடைக்கும் ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.   

1 வருடத்திற்கு பின் உருவாகும் மாபெரும் ராஜயோகம்: செப்டம்பரில் இவர்களுக்கு ஜாக்போட் | Budhaditya Rajyog Giving Lucky Zodiac Signs

மிதுனம் மிதுன ராசியில் 4 ஆவது வீட்டில் புதன், சூரிய சேர்க்கையின் விளைவாக புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் மகிழ்ச்சியான விடயங்கள் அதிகமாக நடக்கும். புதிய வீடு, வாகனம் என செழிப்பாக வாழ்வார்கள். பரம்பரை சொத்துக்கள் உங்களுக்கு இந்த சமயத்தில் கிடைக்கும். வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்பு வரும் என்பதால் உறவினர்களின் கவனம் உங்கள் மீது இருக்கும். சமூகத்தில் வசதியாக இருப்பதால் உங்கள் மீது புதிவிதமான மரியாதை உண்டாகும். வேலையிலும் முன்னேற்றம் அடைவீர்கள். பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. 
தனுசு தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு 10 ஆவது வீட்டில் புதன், சூரிய சேர்க்கை உருவாகும். அப்போது வரும் புதாதித்ய ராஜயோகத்தால் வேலையில் முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு அதிகம் லாபம் கிடைக்கும். புதிய தொழில் துவங்கினால் லாபம் நினைத்ததை விட அதிகமாக கிடைக்கும். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் கொடுக்கப்படும். அதிர்ஷ்டம் கிடைக்கும் சமயத்தில் அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டால் உறவு மேம்படும். 
கன்னி  கன்னி ராசியின் முதல் வீட்டில் புதன், சூரிய சேர்க்கை இந்த யோகம் உண்டாகும். இதனால் அவர்களுக்கு நம்பிக்கை அதிகமாகும். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் மறைந்து அவர்கள் மகிழ்ச்சியாக வாழ ஆரம்பிப்பார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் வீடு தேடி வரும். இதுவரை காலமும் இருந்த பணி சுமை நீங்கும். மாணவர்களின் மனதில் இருந்த பயம் மறைந்து படிப்பில் ஆர்வமாக இருப்பார்கள். சமூகத்தில் உங்களின் நிலை மற்றும் மரியாதை கூடும்.