வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் போது நாம் பொலிவாக இருக்க வேண்டும் என நினைப்போம்.

அது தவறு இல்லை. புத்தாடைகளுக்கு ஏற்ற வகையில் நமது முகத்தையும் பொலிவாக வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு அதிக செலவு செய்து பொரு்கள் வாங்க தேவையில்லை.

விட்டில் உள்ள பொருட்கள் போதும். நாம் வீட்டில் பயன்படுத்தும் காபி தூளை ஒரு சில பொருட்களுடன் சேர்த்து அதை முகத்தில் போட்டால் முகம் பொலிவு பெறும். அதை பற்றி பதிவில் பார்க்கலாம்.

தீபாவளி நாளில் முகம் பொலிவு பெற - இந்த ஒரு பொருளை 10 நாட்கள் போடுங்க | Coffee Powder Face Pack For Glowing Skin

முகத்தைப் பொலிவாக்க காபி பேஸ் மாஸ்க் தயார் செய்கிறீர்கள் என்றால், முதலில் ஒரு பெரிய கிண்ணத்தில் காபி தூள், தேன், பால், ஆலிவ் எண்ணெய் மற்றும் நாட்டு சர்க்கரை போன்றவற்றை நன்கு கலந்துக் கொண்டு ஸ்கரப் போன்று தயார் செய்துக் கொள்ளவும்.

இந்த பேஸ்டை வாரத்திற்கு ஒருமுறை போட வேண்டும். இதை இரவு முழுவதும் போட்டு காலையில் குளிர்ந்த நீரினால் கழுவினால் முகம் பொலிவு பெறும். 

இவ்வாறு ஒரு மாத காலத்திற்கு மேலாக செய்து வரும் போது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி முகம் எப்போதும் பிரகாசமாக இருக்க உதவியாக இருக்கும்.

தீபாவளி நாளில் முகம் பொலிவு பெற - இந்த ஒரு பொருளை 10 நாட்கள் போடுங்க | Coffee Powder Face Pack For Glowing Skin

முகம் மட்டுமல்ல கை மற்றும் கால்களில் உள்ள கருமை நிறத்தை நீக்க வேண்டும் என்றாலும் காபி தூளைக் கொண்டு தயார் செய்யப்படும் பேஸ் பேக்கைப் பயன்படுத்தலாம். இதனடன் தயிரையும் சேர்த்துக்கொள்ளலாம். 

காபியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் முகத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்கி முகப்பரு பிரச்சனைகளை நீக்க உதவுகிறது.

தீபாவளி நாளில் முகம் பொலிவு பெற - இந்த ஒரு பொருளை 10 நாட்கள் போடுங்க | Coffee Powder Face Pack For Glowing Skin

இதோடு நாட்டு சர்க்கரை மற்றும் தேனில் உள்ள பாக்டீரிய எதிர்ப்பு பண்புகள் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அகற்றி முகத்தை எப்போதும் பொலிவுடன் வைத்திருக்க உதவுகிறது.

பாலில் உள்ள கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் சருமத்திற்கு இயற்கையான பொலிவான நிறத்தை அளிக்கிறது. எனவே தீபாவளி நாள் நெருங்குகிறது முகத்தை பொலிவாக்க இந்த பேஸ் பெக்கை பயன்படுத்துங்கள்.