ஜோதிட சாஸ்திரத்தில் தேவதை போன்ற தூய்மையான ஆன்மாக்கள் யார் என்பதை கணித்துள்ளனர். இந்த ராசிகளில் உங்கள் ராசி இருந்தால் பலனை தெரிந்து கொள்ளுங்கள்.

ஒருவர் பிறந்த ராசி மூலம் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை கூற முடியும். அந்த வகையில் தேவதைகள் என்பவர்கள் அமைதியாகவும் தூய்மையாகவும் இருப்பார்கள்.

தற்போது நிலவி வரும் இந்த பரபரப்பான உலகிற்கு அன்பையும் ஆற்றலையும் கொடுக்க பாடுபடுபவர்கள் தான் தேவதைகள். இவர்களுக்கு தன்நலம் இருக்காது அதிக தெய்வீக சக்தி கொண்டவர்கள்.

எனவே இப்படியான பண்புகளுடன் சில ராசி பெண்கள் பிறப்பெடுத்துள்ளனர் என ஜோதிடம் கூறுகின்றது. பெண் ராசிகளில் தூய்மையான தேவதை ராசிகள் யாவர் என்பதை பார்ப்போம்.

தேவதை போன்ற தூய்மையான பெண் ராசியினர் இவர்கள் தானாம் - உங்க ராசியும் இருக்கா? | Female Zodiac Signs Like Angels Is Your Zodiac

கடகம் இந்த ராசியில் பிறந்த பெண்கள் மிகவும் கனிந்த மனம் கொண்டவர்களாம். இவர்கள் எல்லோரிடமும் எல்லைக்கணக்காகவே பழகுவார்களாம். ஆனால் பழகியவர்களுக்கு அன்பை கொடுக்கும் அதிர்ஷ்டசாலிகள் என கூறப்படுகின்றது. இவர்கள் தேவதையின் ஆன்மா என கூறப்படுகின்றுது. எல்லோருக்கும் இவர்கள் தன் அன்பை வாரி வழங்குவார்களாம். மற்றவர்களை இவர்கள் ஒருபோதும் கோபத்திற்கு தூண்ட மாட்டார்களாம். இவர்களுக்கு தன்னலம் இருக்காது என கூறப்படுகின்றது. இவர்களின் இதயம் அன்பு அக்கறையால் நிறைந்திருக்கும் அதை யாருக்கு  வேண்டுமோ அப்படியே அள்ளி கொடுக்க தயாராக இருப்பார்கள். 
துலாம் கருணை உள்ளத்திற்கு பெயர் பெற்றவர்கள் துலாம் ராசிக்காரர்கள். மற்றவர்கள் மீது உண்மையாக அக்கறை கொண்ட பெண் ராசியினர் இவர்கள் தான். சுக்கிரனால் ஆளப்படும் இவர்கள் அதிகமான நீதி நேர்மை உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் சூழ்நிலையை மிகவும் எளிதாக புரிந்துகொள்வார்கள். இதனால் இவர்கள் தேவதை ஆன்மாக்கள் என கூறுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட சில காலத்திற்கு மற்றவர்களின் தேவை தான் தன் வாழ்க்கை என வாழ்வார்கள். கூச்சசுபாவமள்ள நபர்களை தங்கள் நட்பாக்கி கொண்டு அவர்கக்கு தங்கள் அன்பையும் அரவணைப்பையும் கொடுப்பார்கள். 
மீனம்  தெய்வீகம் மற்றும் ஆன்மிகத்திற்கு பெயர் பெற்றவர்கள் தான் மீனராசிக்கார்கள். இவர்களிடம் ஒரு தனித்துவமான உணர்திறன் இருக்கிறது. இதனால் மற்றவர்கள் இருக்கும் கஷ்டமான சூழ்நிலையை புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவி செய்வார்கள். இவர்களின் அற்கறையான இயல்பு மற்றும் அமைதி மற்றவர்களுக்கு ஆறுதல் கொடுக்கும். இவர்களுக்கு நெருங்கியவர்களின் தேவையை மிகவும் எளிதாக புரிந்து கொள்வார்கள். இதனால் தான் இவர்கள் தேவதை குணம் கொண்ட பெண்கள் என அறியப்படுகிறார்கள். இவர்களிடம் இருக்கும் தெய்வீக சக்தி மற்றவர்களின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமாக கருதப்படுகின்றது.