பொதுவாகவே இந்த உலகில் அனைத்தும் அன்பிற்கு கட்டுப்படும் தன்மை கொண்டது தான். அதனால் தான் மனிதர்கள் அன்பிற்காக, ஒரு காதலுக்காக ஏங்கும் குணம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள்.

சிலர் அதனை வெளிப்படையாக ஒத்துக்கொள்வார்கள். ஆனால் சிலர் தங்களின் உணர்வுகளை தங்களுக்குள்ளேயே மறைத்து வைத்துக்கொள்ளும் இயல்பு கொண்டவர்களாக இருப்பார்கள்.

காதலை வெளிப்படுத்தவே தயங்கும் டாப் 3 ராசியினர்... இதுல உங்க ராசியும் இருக்கா? | What Zodiac Sign Is Known For Being Shy In Love

அந்தவகையில்,ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுவதன் பிரகாரம், குறிப்பி சில ராசிகளில் பிறந்தவர்கள் காதல் விடயத்தில் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவர்களாகவும், காதலை வெளிப்படுத்த தயங்குபவர்களாகவும் இருப்பார்களாம்.

அப்படி காதலை வெளிப்படையாக சொல்ல முடியாமல் தவிக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கடகம்

காதலை வெளிப்படுத்தவே தயங்கும் டாப் 3 ராசியினர்... இதுல உங்க ராசியும் இருக்கா? | What Zodiac Sign Is Known For Being Shy In Love

அன்பின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் கடக ராசியினர் இயல்பாகவே காதல் விடயத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாகவும், காதலை அள்ளிக்கொடுக்கும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

ஆனால் அவர்களின் அன்புக்குரியவரிடம் அதனை வெளிப்படையாக சொல்ல முடியாமல் தவிப்பார்கள். இவர்கள் வாழ்க்கை முழுவதும் கூட ஒருதலையாக காதலிக்கும் நபர்களாக அறியப்படுகின்றார்கள்.

அவர்கள் அளவுக்கடந்த அன்பு கொண்டவர்களாக இருந்தாலும், அவர்களின் இயல்பான உணர்ச்சிவசப்படும் தன்மை மற்றும் கூச்ச சுபாவம் இவர்களின் காதல் வாழ்க்கைக்கு மிகப்பெரும் தடையாக இருக்கும்.

கன்னி

காதலை வெளிப்படுத்தவே தயங்கும் டாப் 3 ராசியினர்... இதுல உங்க ராசியும் இருக்கா? | What Zodiac Sign Is Known For Being Shy In Love

கிரகங்களின் இளவரசரான புதனால் ஆளப்படும் கன்னி ராசிக்காரர்கள் இயல்பாகவே எதிலும் முழுமையையும், நேர்த்தியையும் எதிர்பார்க்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

இந்த ராசியினர் வாழ்க்கையை அணுகும் விதத்தில் நுணுக்கமானவர்களாகவும், எந்தவொரு விஷயத்தையும் பகுப்பாய்வு செய்பவர்களாகவும் இருப்பார்கள், இவர்களின் இந்த குணம் காதலை வெளிப்படுத்த அதிக காலத்தை எடுத்துக்கொள்ளும்.

குறிப்பாக இவர்கள் இயல்பாகவே  காதல் விடயத்தில் அதிக கூச்சசுபாவம் கொண்டவர்களாக இருப்பதால், சில சமயம் வாழ்க்கை முழுவதும் கூட தங்களின் காதலை தங்களுக்குள்ளேயே மறைத்துக்கொள்வார்கள்.

விருச்சிகம்

காதலை வெளிப்படுத்தவே தயங்கும் டாப் 3 ராசியினர்... இதுல உங்க ராசியும் இருக்கா? | What Zodiac Sign Is Known For Being Shy In Love

விருச்சிக ராசியினர் பிறப்பிலேயே மர்மமான இயல்புக்கும் ரகசிய தன்மைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். 

இவர்கள் மகிழ்ச்சியான மற்றும் தீவிரமான காதல் உறவை விரும்பினாலும், எப்போதும் அதிலிருந்து விலகியும், எச்சரிக்கையுடனும் இருப்பார்கள். இவர்களின் இந்த தனித்துவமான நடத்தை காதலை வெளிப்படுத்துவதில் ஒரு முக்கிய தடையாக இருக்கும்.

இந்த ராசியினர் காந்த சக்தி கொண்ட கவர்ச்சியுடன் ஒரு மர்மத்திரையும் சேர்ந்தே இருப்பதால், காதல் விவகாரங்களில் அவர்கள் எப்போதும் கூச்ச சுபாவம் கொண்டவர்களாகவே அறியப்படுகின்றார்கள்.