ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் முக்கியமாக கருதப்படும் சனிபகவானுக்கு பிடிக்காத சில வார்த்தைகளை அறிந்து கொள்ளுங்கள்.

ஜோதிட சாஸ்திரங்களில் சனி பகவான் முக்கிய கிரகமாக கருதப்படுகிறார். இதில் சில வார்த்தைகள் அல்லது செயல்கள் அவரை கோபப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

அது நம் நாளாந்த வாழ்வில் இடம்பெறும் வார்த்தைகளாகும். சனி நீதியின் கடவுள் இவர் நன்மையாக இருந்தாலும் தீமையாக இருந்தாலும் அதை நமக்கு சமமாக தந்து முடிப்பார்.

இதனால் தான் அவருக்கு நீதியின் கடவு ள் என பெயர். நாம் மற்றவர்களுடன் பேசும் போதும் ஒவ்வொரு நாளில் நாம் நடந்துகொள்ளும் செயல்களில் சிலவை சனிபகவானை கோபப்படுத்த தூண்டும்.

எனவே இதுவரை நாம் இதுபோன்ற விடயங்களை தெரியாமல் செய்திருந்தால் இனி செய்யாமல் தடுக்க பதிவை படித்து அறிவோம்.

சனிபகவானை கோபப்படுத்தும் இந்த 5 வார்த்தைகள் - தவறியும் சொல்லாதீங்க | These 5 Words Will Anger Lord Saturn Don T Say It

பொய் கூறுவது, ஏமாற்றுவது - சனி பகவான் மிகவும் நேர்மையானவர். எனவே பொய் சொல்வது அவருக்கு பிடிக்காது. ஒரு தவறான செயலை செய்துவிட்டு நான் அதை செய்யவில்லை என்பது சனி பகவானை கோபப்படுத்தும். மற்றவர்களை அவமதிக்கும், கேலி செய்யும் அல்லது குறை கூறும் வார்த்தைகள் சனிபகவானுக்கு பிடிக்காதவை. மற்றவர்களை “நீ ஒரு தோல்வி அடைந்தவன்”, “உன்னால் எதுவும் செய்ய முடியாது” போன்ற இன்னும் சில வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்த கூடாது.

அடுத்து பிறரை சபிக்கும் சொற்கள் - அவன் தோல்வியடைய வேண்டும்”, “அவனுக்கு தண்டனை கிடைக்க வேண்டும்” இதுபோன்ற வார்த்தை உபயோகம் கூடாது.

சனிபகவானை கோபப்படுத்தும் இந்த 5 வார்த்தைகள் - தவறியும் சொல்லாதீங்க | These 5 Words Will Anger Lord Saturn Don T Say It

பிறரின் வெற்றிக்கு நீங்கள் பெருமை சேர்ப்பது - மற்றவர்கள் நமக்கு எதவி செய்ய முன் வரும் போது அதை நாம் இது எல்லாம் எனக்கு தேவை இல்லை என்று அவமதிப்பது சனியின் நீதி உணர்வுக்கு எதிராக இருக்கும். நாம் இன்னொருவருக்கு உதவி செய்ததை பின்னர் சொல்லி காட்ட கூடாது. பெருமை பேசி மற்றவர் மனதை புண்படுத்தும் பழக்கம் சனி பகவானுக்கு பிடிக்காது. ஏதாவது வெற்றி நேர்ந்தால் அதற்கு நான் தான் காரணம் என கூறி பெருமை சேர்க்க கூடாது.

சுய ஒழுக்கம் இல்லாதது - சிலருக்கு இயல்பாக சுய ஒழுக்கம் இருக்காது. இந்த பழக்கம் கடவுளுக்கு பிடிக்காது. கடவுளின் அருளைப் பெற ஒருவர் தகுதியும், நல்லொழுக்கங்களையும் கொண்டிருக்க வேண்டும். அதிலும் “என்ன தவறு செய்தாலும் கடவுள் என்னை மன்னிப்பார்”, “மனிதர்கள் தவறு செய்வது இயல்பு, அவற்றை சரி செய்ய வேண்டியது கடவுளின் வேலை” என்று பொறுப்பில்லாமல் பேச கூடாது.

சனிபகவானை கோபப்படுத்தும் இந்த 5 வார்த்தைகள் - தவறியும் சொல்லாதீங்க | These 5 Words Will Anger Lord Saturn Don T Say It

சனி பகவானை மகிழ்ச்சிப்படுத்தும் செயல்கள் - மேற் கூறப்பட்ட விடயங்களை நீங்கள் செய்திருந்தால் வாழ்க்கையில் தடங்கல், மன அழுத்தம், நிதி நெருக்கடி, உறவில் விரிசல்கள் ஆகியவை ஏற்படலாம்.

இதிலும் சனிபகவான் ஒரு ராசியில் இருந்து இன்னுமொரு ராசிக்கு 4, 7, 10 ஆகிய இடங்களில் இருக்கும் பொழுது அவரின் இன்னும் அதிகரிக்கும். இதற்கு ஜோதிட சாஸ்திரம் சில வழிமுறைகளை பரிந்துரைக்கிறது.

எப்போதும் உண்மையை பேசுவது, மற்றவர்களை மதிப்பது, பணிவாக இருப்பது, சோம்பேறித்தனத்தை தவிர்த்து, உழைப்பது, பொறுப்பை ஏற்றுக் கொள்வது, ஏழைகளுக்கு உதவுவது, சனிக்கிழமைகளில் எள், எண்ணெய்,

கருப்புத் துணி, கடலை ஆகியவற்றை தானம் செய்வது, சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது, ஹனுமன் வழிபாடு செய்வது, சனி மந்திரங்களை ஜெபிப்பது, மற்றவர்களை இழிவு படுத்தாமல் இருப்பது போன்ற நற்சொயலாகும்.