பொதுவாகவே மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் நிச்சயம் ஏதோ ஒரு திறமை இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசிக்கு அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமைகள் மற்றும் குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்ப்பு காணப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் எல்லா துறைகளிலும் திறமையாக செயல்பட கூடிய ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்களாம். இவர்களிடம் எந்த வேலையை கொடுத்தாலும் நேர்த்தியாகவும் முழுமையாகவும் செய்வார்கள்.
அப்படி பன்முகத் திறமைசாலிகளாக பிறப்பெடுத்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக அறியப்படுகின்றார்கள். இவர்களுக்கு இயல்பாகவே பல துறைசார்ந்த அறிவு காணப்படும்.
எல்லா விடயங்களையும் முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இவர்களுக்கு அதிகமாகவே இருக்கும். இவர்களின் இந்த அதீத ஆர்வம் பல துறைகளிலும் திறமையை வளர்த்துக்கொள்ள உதவுகளின்றது.
இவர்கள் எல்லா விடயங்களிலும் திறமைசாலிகளாகவும் வெற்றியாளராகவும் இருப்பார்கள்.இவர்கள் தங்களுக்கு சம்பந்தம் அற்றது என எதையும் கடந்து செல்வது கிடையாது.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் தாங்கள் செய்யும் அனைத்து விஷயங்களிலும் நேர்த்தியையும் முழுமையையும் விரும்புவார்கள்.
இதனால் அவர்கள் சிறந்த ஆளுமை கொண்டவர்களாலும் பல துறைகளிலும் வெற்றியாளர்களாக மாறுகிறார்கள்.
வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமநிலைப்படுத்துவது, வீட்டை நடத்துவது அல்லது மற்றவர்களுக்கு அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க உதவுவது என எதுவாக இருந்தாலும், இவர்கள் சிறப்பாக செயல்படுகின்றார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் பிறப்பிலேயே அதிக புத்தி கூர்மையும், நினைவாற்றலும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் தங்களின் ஒழுக்கம் மற்றும் கவனத்திற்கு பெயர் பெற்றவர்களாக இருப்துடன் பல துறைசாந்தும் சிறந்த அறிவாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.
எந்தவொரு செயலிலும் இறங்குவதற்கு முன்னர் இவர்கள் சிறப்பான திட்டங்களை வகுப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள். இவர்கள் நிச்சயம் பன்முகத் திறமைசாலிகளாக இருப்பார்கள்.