இந்து சமயத்தின் நம்பிக்கையின் அடிப்படையில் வாஸ்து சாஸ்திரம் பார்ப்பது வழக்கம். வீட்டில் எந்தெந்த பொருட்களை எங்கே வைக்க வேண்டும் என்பதுற்கு ஒவ்வொரு வாஸ்த்து விதி உள்ளன.
ஜோதிட , வாஸ்து சாஸ்திரங்களின் படி ஒவ்வொரு செயல்களுக்கும் பலன்கள் உண்டு. சில செயல்கள் நல்ல பலனையும், சில செயல்கள் தீங்கு விளைவிக்கும் என சொல்லப்படுகிறது.
அந்த வகையில் நாம் சில பொருட்களை மட்டும் இலவசமாக பெற்றுக்கொண்டால் என்ன பலன் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
உ்பபு எப்போதும் சனியுடன் தொடர்புடையதாகும். இதனால் இந்த உப்பை யாரிடமும் கடனாகவோ இல்லை இலசமாக பெற்றுக்கொள்ள கூடாது. கைக்குட்டையையும் கடனாக வாங்க கூடாது. அது உங்கள் நிதி சிக்கலை அதிகரிக்கும்.
மேலும் கடன்வாங்கியவர்களுடன் உறவு முறிவுக்கு வழிவகுக்கும். இரும்புப்பொருட்கள் சனியுடன் தொடர்புடையதால் தவறிக்கூட இரும்புப்பொருட்களை யாரிடமும் வாங்க கூடாது.
ஊசியை நீங்கள் கடனாக பெற்றுக்கொண்டால் உங்கள் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கங்கள் ஊடுறுவும். உங்கள் திருமண வாழ்க்கையை கெடுத்து, கெட்ட காலம் சூழ்ந்துவிடும்.
எண்ணெய்யும் சனியுடன் தொடர்புடையதால் யாரிடமும் அதை இலவசமாக வாங்க வேண்டாம். இதனால் உங்கள் வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் வரும்.