நாடு தழுவிய பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு தழுவிய பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிப்பு ஊரடங்கு உத்தரவு - கோப்புப்படம் நாடு தழுவிய பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் மார்ச் 25-ந்தேதியில் இருந்து பொது ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.
4-வது கட்ட பொது ஊரடங்கு நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் 5-வது கட்ட நாடு தழுவிய பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மார்ச் 25-ந்தேதியில் இருந்து ஏப்ரல் 14-ந்தேதி வரைக்கும், ஏப்ரல் 15-ந்தேதியில் இருந்து மே 3-ந்தேதி வரைக்கும்,
மே 4-ந்தேதியில் இருந்து 17-ந்தேதி வரைக்கும், அதன்பின் மே 31-ந்தேதி வரைக்கும் என நான்கு கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.