ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒருவர் பிறந்த ராசி, நட்சத்திரம் அவர்களின் வாழ்க்கை முக்கியமானவையாக பார்க்கப்படுகிறது.
ஒருவரின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள இவை பெரிதும் உதவியாகவும் இருக்கிறது. அதே போன்று அவர்கள் பிறந்த திகதி, மாதம், நேரமும் இதில் உள்ளடங்கும். ஒருவர் பிறந்த மாதமும் அவர்களின் எதிர்காலத்தை பற்றி தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
ஜோதிடத்தின் படி, குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்தவர்கள் தங்கள் துணைக்கு அதிக சிரமங்களை கொடுப்பார்களாம். அவர்களின் திருமண வாழ்க்கை சில தகராறு மற்றும் கொடுமைகள் காரணமாக சில நாட்களிலேயே விவாகரத்தில் முடியும்.
இன்னும் சிலருக்கு திருமணம், தோல்வியில் முடியாவிட்டாலும் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நிம்மதியும் இருக்காது.
அந்த வகையில், எந்தெந்த மாதத்தில் பிறந்தவர்கள் திருமண வாழ்க்கையில் மோசமான அனுபவத்தை பெறுவார்கள் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
| மார்ச் |
மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பானவர்களாகவும், ஆர்வமுள்ளவர்களாகவும் இருப்பார்கள். இதனால் படு உற்சாகமாக இருப்பார்கள். இவர்கள் உறவுகளில் உணர்ச்சிரீதியாக முரண்பாடுகள் இருக்கும். பன்முகத்தன்மை மற்றும் மாற்றத்திற்கான விருப்பம் திருமண உறவில் சில சிக்கல்களை ஏற்படுத்தும். கவர்ச்சிகரமான நபர்களாக இருப்பதால் சந்தேக புத்தி அவர்களின் உறவுகளில் பிரிவுகளுக்கு வழிவகுக்கும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் உணர்ச்சிரீதியாக நிலைத்தன்மை இல்லா காரணத்தினால் காதல் வாழ்க்கையில் தவறான புரிதல் இருக்கும். |
| மே |
மே மாதம் பிறந்தவர்கள் பெரும்பாலும் காதலை புரிந்து கொள்ளாது. எப்போதும் ஒருவிதமான சிந்தனையில் இருப்பார்கள். உணர்வுகளை விட லாஜிக்காக சிந்திப்பதால் இவர்கள் உறவில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத்துணை மீது உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தாலும், அதனை வெளியில் காட்டாமல் இருப்பார்கள். இதனால் அவர்களிடையே பெறும் பிரச்சினைகள் ஏற்படும். சுதந்திரத்திற்கான ஆசை, உணர்ச்சிரீதியாக சவாலான சூழ்நிலைகளை சமாளிக்கும் திறன் அவர்களை தனியாக காட்டும். இப்படியான குணங்கள் திருமண உறவை பிரிவை நோக்கி நகரும். |
| ஜூன் |
ஜூன் மாதம் பிறந்தவர்கள் பிரமாண்டமான பரிசுகள், பாராட்டுகளில் கவனம் செலுத்துவார்கள். விசுவாசம் தீவிரமாக இருப்பதால் துணை அதிகமாக பாராட்ட எதிர்பார்ப்பார்கள். மரியாதை குறைவாக நடத்துவார்கள். சுய மரியாதையை நினைத்து அதிகமாக போராடுவார்கள். நீண்ட கால உறவில் உறுதிப்பாட்டுக்கான ஆசை, மிகவும் சமநிலையான உணர்ச்சிப்பூர்வமான பரஸ்பரம் இருக்காது. எனவே இவர்கள் ஒரே இடத்தில் பணி செய்பவர்கள் என்றால் கவனமாக இருக்க வேண்டும். அதுவும் சிம்ம ராசியாக இருந்தால் துணையை பிரிய முடிவு செய்து விடுவார்கள். |
