வளர்ந்து வரும் நவீனமயமாக்கலிலும் ஒரு சில விடயங்கள் ஜோதிடம் மற்றும் வாஸ்து முறையை கடைபிடித்து தவிர்க்கப்படுகின்றன.

அதன்படி, தொடர்மாடி கட்டிடங்கள், உயரமான கட்டிடங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. வீடுகள் என பார்க்கும் பொழுது, தற்போது பெரும்பாலானோர் தொடர்மாடி வீடுகளில் வசிக்க தான் வரும்புகிறார்கள்.

கிராமப்புறங்களில் இல்லாவிட்டாலும் நகர்புறங்கள் அதிகமாக இருக்கிறது. உயரமான கட்டிடங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தாலும் அங்கு 13 நம்பரில் எந்தவொரு கட்டிடமும் இருக்காது.

சில ஹோட்டல்கள் ஒருபடி மேலே சென்று 13 ஆம் மாடியை தவிர்த்து, 12 ஆம் மாடிக்கு அடுத்தபடியாக 14 ஆம் மாடிதான் இருக்கும். அப்படி ஒருவேளை 13 வது மாடி இருந்தாலும் அங்கு எந்த அலுவலகமும் நடத்தப்படாது. உலகம் முழுவதும் பொதுவாக இருக்கும் இந்த விஷயத்திற்கு பின்னால் என்ன உள்ளது என சந்தேகம் இருந்திருக்கும்.

13 ஆம் நம்பர் துரதிர்ஷ்டமா? நோயா? பலரும் பயந்து நடுங்குவதற்கான அறிவியல் காரணம் | Why Number 13 Is Skipped In Elevators And Hotels

நாம் பொழுதுபோக்கிற்காக பார்க்கும் படங்களிலும் கூட 13 ஆம் நம்பரை வைத்து தான் திகில் படங்கள் எடுக்கப்படுகின்றன. இதற்கான காரணத்தை பதிவில் பார்க்கலாம்.   

நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு வார்த்தையும், அதற்கான ஒரு அர்த்தத்தை கொண்டிருக்கும். உதாரணமாக, “ ட்ரிஸ்கைடேகாஃபோபியா (triskaidekaphobia)” எனப்படுவது 13 என்ற எண்ணைப் பற்றிய கடுமையான பயத்தை குறிக்கிறது.

இந்த போபியா உள்ளவர்கள் 13 என்ற எண்ணைப் பற்றிய கடுமையான பயத்தை கொண்டிருப்பார்கள். அந்த எண்ணைக் காணும்போது குமட்டல், சுவாசிப்பதில் சிரமம், விரைவான இதயத் துடிப்பு, வியர்வை மற்றும் பீதி போன்ற தீவிர சிக்கல்கள் அனுபவிக்கும் நபராக இருப்பார்கள்.

13 ஆம் நம்பர் துரதிர்ஷ்டமா? நோயா? பலரும் பயந்து நடுங்குவதற்கான அறிவியல் காரணம் | Why Number 13 Is Skipped In Elevators And Hotels

கேலப் நடத்திய ஆய்வில், 13% மக்கள் 13வது மாடியில் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் பயம் கொள்கிறார்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தான் சில ஹோட்டல்கள் ட்ரிஸ்கைடேகாஃபோபியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 13 என்ற எண்ணை தவிர்க்கிறார்கள்.   

1. நார்ஸ் புராணங்களின்படி, லோகி 13-வது நார்ஸ் கடவுளாகக் கருதப்படுகிறார். இவர், தந்திரக்காரக் கடவுள் மற்றும் குழப்பம் மற்றும் குறும்புகளின் தெய்வம் என்பதாலும், 13வது விருந்தினராக வந்த யூதாஸ் தான் இயேசுவைக் காட்டிக் கொடுத்தவர் என்பதாலும் 13 நம்பர் துரதிஷ்டமாக பார்க்கப்படுகிறது.

2. பைபிளும் புராணங்களும் 13 என்ற எண்ணின் மோசமான அர்த்தத்திற்குக் காரணமாக இருப்பதால் 20 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு கற்பனைக்கதைகளிலும் இந்த மோசமான நாளாக காட்டியிருக்கிறார்கள்.

13 ஆம் நம்பர் துரதிர்ஷ்டமா? நோயா? பலரும் பயந்து நடுங்குவதற்கான அறிவியல் காரணம் | Why Number 13 Is Skipped In Elevators And Hotels

3. ஆசிரியர் தாமஸ் லாசன் 1907 இல் Friday, the Thirteenth என்ற புத்தகத்தை வெளியிட்டார். இந்த நாவல் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையை சிதைக்க ஒரு தரகரின் திட்டத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ளது. கிட்டதட்ட அனைத்து கலாச்சாரங்களிலும் மக்கள் எண் கணிதத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் 13 நம்பர் மீது உள்ள நம்பிக்கை குறைந்து விட்டது.

13 ஆம் நம்பர் துரதிர்ஷ்டமா? நோயா? பலரும் பயந்து நடுங்குவதற்கான அறிவியல் காரணம் | Why Number 13 Is Skipped In Elevators And Hotels

4. வழக்கமாக நாம் யதார்த்தமாக 11:11 என நேரம் காட்டினால் நினைத்த விடயம் நடக்கும் என நம்புவது போன்று 13 என்ற எண் எப்போதும் துரதிர்ஷ்டம் மற்றும் எதிர்மறையுடன் தொடர்புடையது என நம்புகிறார்கள்.

5. சினிமா படங்களில் லிஃப்ட் மற்றும் ஹோட்டல்களில் எதிர்மறையான சக்தி இருப்பதாக காட்டப்படுகிறது. இதனால் மக்கள் பாதுகாப்பாக உணர்வதில்லை. இதனால் தான் மக்கள் அந்த எண்ணை தவிர்க்கிறார்கள்.