தலைமுடி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் தலையில் எந்தவித பிரச்சினையும் வராமல் கட்டுக்குள் வைப்பது அவசியம்.
பொடுகு, கிருமிகள் தொற்று, முடி பிளவுகள், முடி வறட்சி, முடியில் பிசுபிசுப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கக்கூடாது.
இது போன்ற பிரச்சினைகளுக்கான தீர்வை ஹேர் பேக் கொடுக்கிறது.
அந்த வகையில், தலைமுடி பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுக் கொடுக்கும் ஹேர் பேக் எப்படி தயாரிக்கலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தேங்காய் பால்- தேவையான அளவு
முட்டை- 1 (வெள்ளை கரு)
செய்முறை
தலைமுடி ஏற்ப தேங்காய் பால் எடுத்து, அதனுடன் முட்டையின் வெள்ளை கரு மாத்திரம் கலந்து கொள்ளவும்.
இதனை பேக்கை தலைக்கு குளிப்பதற்கு முன்னர் தலையில் தடவி, நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.
இப்படி வாரத்திற்கு 2 முறை செய்தால் தலைமுடிக்கு தேவையான அனைத்து விதமான சத்துக்களும் கிடைத்து விடும்.
தலைமுடி பார்ப்பதற்கு அப்படியே பட்டு போன்று ஆரோக்கியமாக மிளிரும். நாளடைவில் தலைமுடி வளர்ச்சியும் அதிகரிக்கும்.