பொதுவாக ஒவ்வொரு தனி மனிதர்களுக்கும் சில தனித்துவமான குணங்கள் காணப்படுகின்றது. ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவரின் பிறப்பு ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட ஆளுமைகளில் பெருமளவில் தாக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் காதல் விடயத்தில் பொரும்பாலும் ஏமாற்றும் குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம். இவர்கள் நீண்ட காலத்துக்கு ஒரே உறவில் இருப்பது மிகவும் சவாலானதாக இருக்கும்.
அப்படி காதல் துணையை ஏமாற்றும் குணம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே மர்மமான ஆளுமைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் காதலில் ஒரு துணையுடன் அதிக நாட்கள் இருக்கும் போது பெரும்பாலும் சலிப்படைய கூடும். அதனால் இவர்கள் துணையை விட்டு போய் விடுவார்கள் என்று அர்த்தம் கிடையாது.
காதல் விடயத்தில் சற்று இடைவெளியெடுத்துக்கொண்டு சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு அடிக்கடி ஏற்படுவதால் இவர்கள் காதல் விடயத்தில் ஏமாற்றுவதற்கு அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.
தனுசு
தனுசு ராசியில் பிறந்தவர்கள் சாகச இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.இவர்கள் தங்களின் சுதந்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.
அதனால் காதல் துணை தங்களை கட்டுபடுத்த நேரிட்டால் அந்த உறவில் இருந்து எப்படி விலகுவது என்ற சிந்தனை இவர்களுக்கு வந்துவிடும்.
இந்த ராசியினர் பெரும்பாலும் பொறுப்புகளில் சிக்கிக்கொள்ள விரும்புவது கிடையாது. அதனால் காதலில் ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கின்றபோதும் பொறுப்புகளுக்கு கடமைகளுக்கும் பயந்து காதலில் அதிகம் ஏமாற்றும் இயல்பு இவர்களுக்கு இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களிடமும் கூட உள்ளுணர்வுகளை பகிர்ந்துக்கொள்ள விரும்புவது கிடையாது.
இவர்களின் இந்த குணம் காதல் விடயத்தில் இவர்களை மர்மமானவர்களாகவும் ஏமாற்றுக்காரர்களாகவும் மாற்றக்கூடும்.
உறவுகளுக்குள்ளாக இருந்தாலும் சரி, அல்லது அவர்களுக்கு அப்பாலும் கூட, விரிவாக்கம் மற்றும் பரிணாமம் அவர்களின் வாழ்க்கை மந்திரமாக இருக்கும். இவர்கள் தங்களின் நிலையை அடிக்கடி மாற்றிக்கொள்ள விரும்புகின்றார்கள்.