ஜோதிட சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் ஒருவரின் பிறப்பு ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, விசேட ஆளுமை மற்றும் அதிர்ஷ்டத்தில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும்.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களின் பார்வையில் சாதாரணமாக தோன்றினாலும் யாரும் எதிர்ப்பார்க்காத தருணத்தில் திடீரென கோடிகளுக்கு சொந்தக்காரர்களாக மாறிவிடுவார்களாம்.
அப்படி இயல்பாகவே பணத்தை ஈர்க்கும் அதிர்ஷ்டம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
கிரகங்களின் தளபதியான செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த மேஷ ராசியினர் பிறப்பிலேயே ராஜ யோகம் பெற்றவர்களாக இருப்பார்களாம்.
இவர்களிடம் ஏராளமான திறமைகளும், தலைமைத்துவ குணங்களும் நிறைந்திருப்பதால். அவர்கள் சரியான நேரத்தில் வெற்றியை தனதாக்கிக்கொள்வார்கள்.
இவர்களிடம் காணப்படும் நேர்மறை குணங்கள் இவர்களை யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கோடீஸ்வரராக மாற்றுவதற்கு முக்கிய காரணமாக இருக்கும். இவர்களிடம் அசாத்தியமான தன்னம்பிக்கை இருக்கும்.
சிம்மம்
கிரகங்களின் ராஜாவாக திகழும் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசியினர் பிறப்பிலேயே தலைவர்களாகும் யோகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அவர்களிடம் இயல்பாகவே இருக்கும் வசீகர தன்மை மற்றும் தன்னம்பிக்கையால் பணத்தையும் வெற்றியையும் இவர்களை நோக்கி வெகுவாக ஈர்க்கும்.
இவர்கள் சற்றும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் கோடிகளில் சம்பாதிக்க ஆரம்பித்துவிடுவார்கள். இவர்களுக்கு எப்போதும் வெற்றிகளை குவிப்பதற்கு இவர்களின் அதிஷ்டமும் பக்கபலமாக இருக்கும்.
தனுசு
குருவின் ஆதிக்கத்தில் பிறந்த தனுசு ராசியினர் நம்பிக்கை மற்றும் சாகசத்தின் அடையாளமாக அறியப்படுகின்றார்கள்.
இவர்கள் மனதில் தங்களின் ஆசைகளை அடிக்கடி கற்பனை செய்து பார்க்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இதனால் தனுசு ராசிக்காரர்கள் எதிர்பாராத சூழ்நிலைகளில் அதிர்ஷ்டத்தை சந்திக்கும் வாய்ப்பை பெறுவார்கள்.
பயணம் மற்றும் முன்னேற்றத்தை விரும்பும் இவர்களின் அனைத்து ஆசைகளும் இவர்களே எதிர்பாராத நேரத்தில் இவர்களிடம் வந்துசேரும்.