பொதுவாக பெண்கள் தற்போது அதிகமான கூந்தல் உதிர்வு, பொடுகு மற்றும் இளநரை போன்ற பிரச்சினைகளால் அவஸ்தைபடுகிறார்கள்.
இதனை உணவுகள் பயன்பாடு, சிகிச்சை முறைகள் மற்றும் மூலிகை எண்ணெய்கள் பாவணை மூலம் கட்டுபடுத்த முடியும்.
அந்தவகையில் தலைமுடி பிரச்சினைகளை எளிய முறையில் குறைக்ககூடிய ஒரு மூலிகை எண்ணெய் எப்படி தயாரிப்பது என்பது பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- நல்லெண்ணெய்- 1/2 லிட்டர்
- மிளகு- 100 கிராம்
- மருதாணி இலை- கைபிடி அளவு
- வெந்தயம்- ஊற வைத்தது.
- தயிர், மிளகு இரண்டையும் ஒன்றாக கலந்து மோர் போன்று தயார் செய்து வைத்து கொள்ளவும்.
- மறுநாள் காலையில் இந்த கலவையை மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைக்கவும்.
- மிளகு எந்த அளவிற்கு எடுத்தோமோ அதே அளவிற்கு மருதாணி இலைகளையும் எடுத்து, நன்றாக கழுவிய பின்னர் நீர் சேர்த்து அரைக்கவும். அதே போன்று வெந்தயம் எடுத்து முதல் நாள் இரவே ஊற வைக்கவும். அதையும் எடுத்து தனியாக வைக்கவும்.
- இதனை தொடர்ந்து ஒரு கனமான இரும்பு கடாயை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணையை ஊற்றி எண்ணெய் சூடானதும், அரைத்து வைத்திருக்கும் 3 விழுதையும் எண்ணெய் போடவும்.
- கலவையில் இருக்கும் சலசலப்பு முற்றிலும் நின்று விடும் வரை அடுப்பிலேயே குறைந்த தீயில் வைத்து கரண்டியால் கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
- எண்ணெய் சூடு ஆறியதும் ஒரு வடிகட்டியை பயன்படுத்தி, வடிக்கட்டி போத்தலில் அடைத்து வைக்கவும். வாரத்திற்கு 3 நாட்கள் வரை பயன்படுத்தலாம். ஆனால் இரண்டு மணி நேரம் தலையில் எண்ணெயை ஊற விட வேண்டும்.