தை பிறந்து விட்டால் வீட்டில் விஷேசங்களுக்கு பஞ்சமே இருக்காது.

இப்படி இருக்கும் பட்சத்தில் மமுருகப்பெருமானை நினைத்து பலரும் விரதம் இருந்து தைப்பூசம் போன்ற வழிபாடுகளை மேற்கொள்வார்கள். அப்போது முருகனுக்கு படைப்பதற்காக சில உணவு வகைகள் செய்து படைப்பார்கள்.

அப்படி அதிகமான வீடுகளில் செய்யப்படும் பாயாசம் தான் தினை பாயாசம்.

ஏகப்பட்ட ஆரோக்கிய பலன்களை தன்வசம் வைத்திருந்தாலும், ஆண்களை பெறும் அவஸ்தைக்கு உள்ளாக்கும் ஆண்மை குறைபாட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வளிக்கிறது.

ஆண்மை குறைபாட்டை போக்கும் தினை பாயாசம்- தினமும் குடிக்கலாமா? | Thinai Payasam Recipeஅந்த வகையில், முருகப்பெருமானுக்கு பிடித்தமான தினையை வைத்து எப்படி பாயாசம் செய்யலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்

  • தினை – ஒரு கப்
  • வெல்லம் – ஒரு கப்
  • பாசிப்பருப்பு – 1/4 கப்
  • தேங்காய் பால் – ஒரு கப்
  • முந்திரி – 20
  • திராட்சை -15
  • ஏலக்காய் – 3
  • நெய் – 6 ஸ்பூன்
  • தேங்காய் பொடியாக நறுக்கியது – 1/4 கப்
  • உப்பு – 1/2 ஸ்பூன்

செய்முறை

ஆண்மை குறைபாட்டை போக்கும் தினை பாயாசம்- தினமும் குடிக்கலாமா? | Thinai Payasam Recipe

முதலில் ஒரு அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து தினை மற்றும் பாசிப்பயற்றை வாசம் வரும் வரை தனித்தனியாக வறுத்து கொள்ளவும்.

பின்னர் ஒரு குக்கரில் 6 கப் அளவு தண்ணீர் ஊற்றி வறுத்து வைத்திருக்கும் தினை, பாசிப்பயறு ஆகிய இரண்டையும் போட்டு நன்றாக வேக வைக்கவும்.

அது ஒரு புறம் இருக்கையில், வெல்லத்தை எடுத்து கட்டி இல்லாமல் கரைத்து வைத்து கொள்ளவும். இதனை தொடர்ந்து, அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நெய் விட்டு சூடானதும் முந்திரிப்பருப்பு, திராட்சை மற்றும் தேங்காய் பூ ஆகிய இரண்டையும் தனித்தனியாக போட்டு வறுக்கவும்.

ஆண்மை குறைபாட்டை போக்கும் தினை பாயாசம்- தினமும் குடிக்கலாமா? | Thinai Payasam Recipeவறுத்தவுடன் ஆறவிட்டு பொடித்து கொள்ள வேண்டும். தினை நன்றாக வெந்தவுடன் பாசிப்பயற்றுடன் நன்றாக கலந்து விடவும்.

அதனுடன் வெல்லம் கரைச்சல், ஏலக்காய் பொடி, உப்பு ஆகியவற்றை போட்டு ஒரு கொதிக்கு அடுப்பை குறைத்து வைக்கவும். கொதிக்கும் பொழுது பால் ஊற்றி, முந்திரி, திராட்சை, தேங்காய் ஆகியவற்றை போட்டு கிளறவும்.

மிதமான வெப்பநிலையில் 5 நிமிடங்கள் வரை வைத்திருந்து கடைசியாக நெய் விட்டு கிளறி இறக்கினால் சுவையான தினை பாயாசம் தயார்! 

ஆண்மை குறைபாட்டை போக்கும் தினை பாயாசம்- தினமும் குடிக்கலாமா? | Thinai Payasam Recipe