பொதுவாக வீடுகளில் அநேகமான வீடுகளில் செய்யப்படும் குழம்பு என்றால் அது சாம்பாராக தான் இருக்கும். மாறாக, சாம்பாரை தாண்டி செய்யக்கூடிய குழம்புகள் பல உள்ளன.

அதில் ஒன்று தான் வத்தல் குழம்பு. இந்த வத்தல் குழம்பு செய்வது சுலபமாக செய்யலாம் என்பதால், திருமண வீடுகளிலும் சாப்பாட்டில் சேர்க்கிறார்கள்.

வத்தல் குழம்பை சுமாராக மூன்று நாட்கள் கூட வைத்து சாப்பிடலாம். வத்தல் குழம்பு வகைகளில் சுண்டைக்காய் வத்தல் பலருக்கும் விருப்பமான ஒன்று.

அந்த வகையில், வத்தல் குழம்பு எப்படி செய்யலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

அட்டகாசமான வத்த குழம்பு செய்வது எப்படி? 3 நாட்கள் கூட வைச்சு ருசிக்கலாமாம்.. செய்து பாருங்க | Vatha Kulambu Recipe In Tamil

தேவையானப் பொருட்கள்

  • சின்ன வெங்காயம் - 10
  • பூண்டு பல் - 10
  • தக்காளி - 1
  • சுண்டைக்காய் வற்றல்- 2 டேபிள் ஸ்பூன்
  • மணத்தக்காளி வற்றல் - 2 ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 2
  • சாம்பார் பொடி - 2 ஸ்பூன்
  • மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
  • கறிவேப்பிலை- சிறிது
  • கடுகு- 1/2 ஸ்பூன்
  • உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
  • வெந்தயம் - 1/4 ஸ்பூன்
  • கடலை எண்ணெய் - 7 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு

அரைக்க தேவையான பொருட்கள்

  • கடலைப்பருப்பு -1 ஸ்பூன்
  • வர மல்லி - 1 ஸ்பூன்
  • சீரகம் - 1/2 ஸ்பூன்
  • சோம்பு - 1/2 ஸ்பூன்
  • தேங்காய் துருவல் - 1/4 கப்
  • சின்ன வெங்காயம் - 6
  • தக்காளி - 1
  • காய்ந்த மிளகாய் - 3
  • காஷ்மீரி மிளகாய் வற்றல்  - 3      

புளியை சூடான நீரில் போட்டு 20 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும் பின்னர், தண்ணீர் சேர்த்து கொட்டைகள் இல்லாமல் கரைத்து கொள்ளவும்.

அட்டகாசமான வத்த குழம்பு செய்வது எப்படி? 3 நாட்கள் கூட வைச்சு ருசிக்கலாமாம்.. செய்து பாருங்க | Vatha Kulambu Recipe In Tamil

அடுத்து, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு அதில், கடலைப்பருப்பு மற்றும் மல்லி விதை சேர்த்து லேசாக வறுக்கவும். அதனுடன் சீரகம், சோம்பு சேர்த்து வாசம் வரும் வரை வறுக்கவும். அதனை தனியாக எடுத்து வைத்து விட்டு, வர மிளகாய் வற்றல் மற்றும் காஷ்மீரி மிளகாய் சேர்த்து லேசாக நிறம் மாறியதும் சின்ன வெங்காயம், தக்காளி மற்றும் தேங்காய் துருவல் ஆகிய பொருட்களை போட்டு நிறம் மாறும் வரை லேசாக அரைத்து விட்டு அடுப்பை அணைக்கவும்.

கலவை ஆறியதும் சிறிய மிக்ஸி ஜாரில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். அதன் பின்னர், அதே வாணலியில் கடலை எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம், கடுகு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை போடவும்.

அட்டகாசமான வத்த குழம்பு செய்வது எப்படி? 3 நாட்கள் கூட வைச்சு ருசிக்கலாமாம்.. செய்து பாருங்க | Vatha Kulambu Recipe In Tamil

பொரிந்து வரும் பொழுது சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதங்க விடவும். அந்த கலவையுடன் நறுக்கிய தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதங்க விட்டு சாம்பார் பொடி சேர்க்கவும்.

அதன் பின்னர் புளிக்கரைசலை ஊற்றி, நன்றாக கலந்து விட்டு மஞ்சள் தூள் மற்றும் உப்பு தூவி இறக்கவும். கடைசியாக புளிகரைச்சலுடன் அரைத்த விழுது, வர மிளகாய், மணத்தக்காளி வற்றல் மற்றும் சுண்டைக்காய் வற்றல் ஆகிய பொருட்களை வறுத்து சேர்த்து கொள்ளவும். சுமாராக 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விட்டால் சுவையான கார குழம்பு தயார்!     

அட்டகாசமான வத்த குழம்பு செய்வது எப்படி? 3 நாட்கள் கூட வைச்சு ருசிக்கலாமாம்.. செய்து பாருங்க | Vatha Kulambu Recipe In Tamil