தற்போது இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கங்கள் காரணமாக தலைமுடி பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிலர் தலையில் சும்மா கையை வைத்தாலும் கூட தலைமுடி கையுடன் வந்து விடும்.
மோசமான உணவு பழக்கங்களுக்கும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இதற்காக சந்தையில் பலப்பொருட்கள் விற்பனை செய்தாலும் அதனை வாங்கி பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள் கணிசமாக இருக்கிறது.
உதிர்ந்த இடத்தில் முடி வளர்வதும் தாமதமாக இருப்பவர்கள் முறையான வாழ்க்கையை முறை கடைபிடிக்க வேண்டும். அத்துடன் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை தலைக்கு பயன்படுத்தினால் தலைமுடி வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் பார்க்கலாம்.
கடைகளில் செயற்கையாக விற்கக்கூடிய சீரத்தில் ஏகப்பட்ட ரசாயனங்கள் இருப்பதால் தலைமுடி உதிர்வை அதிகப்படுத்து வாய்ப்பு உள்ளது. இதனால் வீட்டில் கிடைக்கக் கூடிய பொருட்களை கொண்டு இயற்கையாக தயாரிக்கலாம்.

அப்படியாயின், தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் சீரம் எப்படி தயாரிக்கலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வெங்காயம்
- பூண்டு
- காபித்தூள்
- தண்ணீர்
செய்முறை
மேற்தரப்பட்ட பொருட்களை நன்றாக தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். காபித்தூளை கலந்து வேக வைத்தால் பேஸ்ட் பதத்திற்கு வரும்.

ஒரு கொதி வந்த பிறகு மூடி வைத்து நான்கு நிமிடம் குறைந்த தீயில் அப்படியே வைத்து விடவும். சுமாராக 3 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட்டு வடிகட்டி ஸ்ப்ரே பாட்டிலில் வைத்து கொள்ளவும்.
அதனை குளிக்க செல்வதற்கு முன்னர் தலைக்கு ஸ்ப்ரே செய்து விரல் நுனிகளால் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு ஒரு பிளாஸ்டிக் கவரை பயன்படுத்தி இந்த சீரத்தின் ஈரப்பதம் அப்படியே தலையில் தங்கும் படி கட்டிவிட வேண்டும்.

இரண்டு மணி நேரம் கழித்து நாம் எப்பொழுதும் பயன்படுத்தும் ஷாம்புவை பயன்படுத்தி தலைக்கு குளிக்க வேண்டும்.
இப்படி தொடர்ந்து இரண்டு வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் தலைமுடி உதிர்ந்த இடத்தில் எல்லாம் முடி முளைக்க ஆரம்பிக்கும்.
