பொதுவாக நடுத்தர வாழ்க்கை வாழும் அனைவருக்கும் பணக்கஷ்டம் இருக்கும். ஆனால் சில நேரங்களில் அதனை சமாளித்து விடலாம், அதே சமயம் கடன் வாங்கி பிரச்சினைகளில் சிக்கி விட்டால் அதனை சமாளிப்பது சற்று கடினமாக இருக்கும்.
அப்படியானவர்கள் வியாழக்கிழமைகளில் வீட்டில் குபேரரை நினைத்து மாலை வழிபாடு செய்ய வேண்டும். இப்படி செய்தால் அவரின் பலன் கிடைத்து உங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் குறையும்.
அவ்வளவு சிறப்பு வாய்ந்த வியாழக்கிழமையோடு பௌர்ணமி திதியும் சேர்ந்து வருவது என்பது கூடுதல் விசேஷம். இந்த தினம் நாம் நினைத்த காரியங்கள் அணைத்தும் கைக்கூடலாம்.
அதுவும் இந்த நாளில் மாலை 5:00 மணியில் இருந்து இரவு 12 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும் அப்படி செய்தால் பண வசியம் உண்டாகும் என ஜோதிடம் கூறுகிறது.
அப்படியாயின், குபேர பௌர்ணமி தினத்தில் செய்யக் கூடிய பரிகாரங்கள் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பரிகாரங்கள்
1. குரு பகவான் மற்றும் குபேரருக்கு உகந்த நாளாக திகழக்கூடிய வியாழக்கிழமகளில் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். அப்படி இயலாதவர்கள் மாலை வேளைகளில் ஒரு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இப்படி செய்து வந்தால் பணம் வசியம் உண்டாகி, பணக்கஷ்டங்கள் மறையும்.
2. வழக்கமாக வீடுகளில் காலை, மாலை என இரண்டு வேளைகளும் தீபம் ஏற்றுவார்கள். அதே போன்று குபேர பௌர்ணமி தினத்தில் மாலை வேளைகளில் தீபம் ஏற்றலாம். அந்த தீபம் இரவு வரை அணையாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
3. வீட்டில் கண்டிப்பாக முறையில் காமாட்சி அம்மன் விளக்கு இருக்கும். அந்த விளக்கை ஒரு தாம்பாளத்தின் மேல் வைத்து தான் நாம் தீபம் ஏற்றுவது வழக்கம். அப்படி தாம்பாளத்தின் மேல் விளக்கை வைப்பதற்கு முன்பாக அந்த விளக்கிற்கு அடியில் இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய், ஒரு ஐந்து ரூபாய் நாணயம் இவற்றை வையுங்கள். அதன் பின்னர் காமாட்சி அம்மனின் விளக்கை வைத்து நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி ஏற்ற வேண்டும்.
4. இந்த தீபம் குறைந்தபட்சம் அரை மணி நேரம் இந்த தீபம் எரிய விட்டு அணைக்கவும். விளக்கிற்கு அடியில் இருக்கக்கூடிய ஏலக்காய், கிராம்பு, ஐந்து ரூபாய் நாணயம் ஆகியவற்றை எடுத்து சிவப்பு, பச்சை அல்லது மஞ்சள் இந்த மூன்று நிறங்களில் ஏதாவது ஒரு நிறத்தில் துணியை எடுத்து அதற்குள் வைத்து மூட்டையாக கட்டி, பண செலவை அதிகப்படுத்தும் இடத்தில் வையுங்கள்.
5. சிலர் தீபத்திற்கு கீழ் உள்ள ஏலக்காய் மற்றும் கிராம்பை கால்படாத இடத்தில் போட்டு விடுவார்கள். அப்படி இல்லாவிட்டால் சாம்பிராண தூபம் காட்டுவதற்கும் பயன்படுத்தலாம். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் கிராம்பு மற்றும் ஏலக்காயின் சக்தி கிடைக்கும்.