பொதுவாக விடுகளில் மதிய உணவிற்கு ஒரு அசத்தலான கறிவகை செய்தெ ஆக வேண்டும். இதில் முக்கிய இடம்பிடிப்பது புளிக்குழம்பு அல்லது சாம்பார் தான். ஆனால் காரக்குழம்பு பெரியளவில் யாரும் செய்வதில்லை.

காரக்குழம்பு என்றால் அதில் காய்கறி சேர்த்து தான் செய்வது தான் வழக்கம். ஆனால் வெந்தயத்தை வைத்து மட்டும் காரக்குழம்பு செய்ய நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

இந்த பதிவில் வெந்தய காரக்குழம்பு எப்படி எசய்யலாம் என்பதை தான் பார்க்கப்போகின்றோம். இதை சூடாட சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் சுவை பிரமாதமாக இருக்கும். இதற்கு வெந்தய கார குழம்பு என்று பெயர். வாங்க செய்முறை பார்க்கலாம்.

காய்கறியே இல்லாத காரக்குழம்பு! நாவில் எச்சில் ஊற இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Vendhaya Kulambu Recipe Kaara Kuzhambu Healthy

தேவையானப் பொருட்கள்

  • வெந்தயம் - 4 ஸ்பூன்
  • வரமிளகாய் - 4
  • மல்லி - 3 ஸ்பூன்
  • சீரகம் - ஒரு ஸ்பூன்
  • சின்ன வெங்காயம் - 10
  • பூண்டு - 8 பல்
  • புளி - ஒரு எலுமிச்சை அளவு
  • தேங்காய் துருவல் - அரை கப்
  • கடுகு - அரை ஸ்பூன்
  • உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
  • கறிவேப்பிலை - 1 கொத்து
  • உப்பு - தேவையான அளவு
  • நல்லெண்ணெய் - தேவையான அளவு  

செய்முறை

முதலில் தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொள்ளவும். பின்னர்  வெங்காயம், பூண்டை உரித்து வைக்கவும். தேவையான வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.

காய்கறியே இல்லாத காரக்குழம்பு! நாவில் எச்சில் ஊற இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Vendhaya Kulambu Recipe Kaara Kuzhambu Healthy

இதன் பின்னர் வரமிளகாய், மல்லி, சீரகம் இவை மூன்றையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும். இந்த வறுத்த பொருட்களை பொடியாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை  வைத்து நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதில் ஊற வைத்த வெந்தயத்தை வடிகட்டி வாணலியில் போட்டு வதக்கவும்.

இது நன்றாக வதங்கியதும் நறுக்கின வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். அதனுடன் அரைத்து வைத்திருக்கும் மிளகாய் விழுதினை போட்டு வதக்கவும். பின்னர் பச்சை வாசனை போனதும் அரைத்து வைத்திருக்கும் தேங்காயை சேர்க்கவும்.

காய்கறியே இல்லாத காரக்குழம்பு! நாவில் எச்சில் ஊற இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Vendhaya Kulambu Recipe Kaara Kuzhambu Healthy

குழம்பு கொதித்ததும் புளியை கரைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பின்னர் அடுப்பை குறைத்து வைத்து கொதிக்க விடவும்.

இது நன்றாக எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கி வைக்கவும். இதை சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் சுவை பிரமாதமாக இருக்கும். உடலில் இருக்கும் அதிக சூட்டையும் தணிக்கும்.