ஒருவர் பிறக்கும ராசியானது அவர்களின் விசேட குணங்களிலும் எதிர்கால வாழ்க்கையிலும் பெருமளவான ஆதிக்கத்தை கொண்டிருக்கும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே உண்மை போலவே பொய் சொல்வதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.

இப்படி பொய் சொல்வதை கைவந்த கலையாகவே கொண்டிருக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
துலாம்

துலாம் ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே மற்றவர்களை கவரும் வகையில் பேசக்கூடிய திறமை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் பெரும்பாலான சமயங்களில் பொய் சொல்லாமல், உண்மையை நாசூக்காக மறைப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசியினர் தங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பார்கள்.
விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் ரகசியம் காப்பதில் கில்லாடிகளாக இருப்பாரை்களாம். இவர்களிடமிருந்து ஒரு உண்மையை வரவழைப்பது மிகவும் சவாலான விடயமாகும்.
இவர்கள் குறிப்பாக ரகசியங்களை காப்பாற்றும் நோக்கில் அதிக பொய் சொல்லும் குணத்தை கொண்டிருப்பார்கள்.
அதனால் இவர்கள் மற்றவர்களின் பார்வையில் மர்மம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் இவர்கள் பொய் சொல்லுகின்றார்கள் என்பதை யாராலும் கண்டுப்பிடிக்கவே முடியாது.
தனுசு

தனுசு ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் சாகச விரும்பிகளாக இருப்பார்கள். இவர்கள் யாருக்காகவும் தங்களின் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க விரும்பவே மாட்டார்டகள்.
இவர்கள் தங்களின் சுதந்திரத்தை பறிக்காதவர்களிடம் மட்டுமே பழக்கம் வைத்துக்கொள்ள நினைப்பார்கள். அதே சமயம் எந்த உறவுகளிலும் சிக்கிக்கொள்ள விரும்பாத காரணத்தால் அதிகமான பொய்களை சொல்லுவார்கள்.
பிறரை ஈர்க்க வேண்டும் என்பதற்காக, உண்மையை வெளிப்படையாக கூறாமல் அதனை கொஞ்சம் சுற்றி வளைத்து புரியாத வகையில் கூறி சமாளிக்கும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
