ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை மற்றும் நேர்மறை, எதிர்மறை குணங்களில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.

இந்த வகையில் திருமண உறவு  என்பது இரண்டு வெவ்வேறு குணம் கொண்ட, வெவ்வேறு சூழ்நிலைகளில் வளர்ந்த வேறுப்பட்ட அனுபங்களை கொண்ட இருவர் இணைந்து ஒன்றாக வாழ வேண்டிய நிலையை ஏற்படுத்துகின்றது.

இந்த இரண்டு ராசிகளுக்கும் ஒத்தே வராது... தவறியும் திருமணம் செய்திடாதீங்க | Which Zodiac Couples That Make The Worst Pair

இந்நிலையில் இரண்டு எதிர் எதிர் குணம் கொண்ட நபர்கள் திருமண பந்தத்தில் இணைந்தால் வாழ்க்கை மிகவும் போராட்டம் நிறந்ததாக மாறிவிடும்.

எனவே குறிப்பிட்ட சில ராசிகளின் இணைவு முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியது என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. இப்படி திருமண பொருத்தம் இல்லாத ராசிகள் எவை என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம் மற்றும் ரிஷபம்

இந்த இரண்டு ராசிகளுக்கும் ஒத்தே வராது... தவறியும் திருமணம் செய்திடாதீங்க | Which Zodiac Couples That Make The Worst Pair

இந்த இரண்டு ராசயினரும் காதல் செய்தாலோ அல்லது திருமணம் செய்தாலோ, ஒருவரையொருவர் காதலிப்பதைத் தவிர, வேறு எந்த பொறுத்தமும் இவர்களுக்கு இடையில் இருக்காது.

மேஷ ராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் லட்சியத்தின் பின்னால் ஓடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் வாழ்க்ககை துணையின் எல்லா விரும்பங்களையும் முழுமையாக அறிந்துக்கொள்ள கூட நேரம் செலவிட மாட்டார்கள்.

ஆனால் ரிஷப ராசிக்காரர்கள் காதல் விடயத்தில் மிகுந்த அர்ப்பணிப்பு கொண்டவர்களாக இருப்பார்கள். வாழ்க்கை துணை தனக்கான நேரத்தை கொடுக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டுவார்கள். இந்த இரண்டு ராசிகள் திருமண வாழ்க்கையில் இணைந்தால் இருவருமே மகிழ்ச்சியை இழக்க நேரிடும்.

மிதுனம் மற்றும் மீனம்

இந்த இரண்டு ராசிகளுக்கும் ஒத்தே வராது... தவறியும் திருமணம் செய்திடாதீங்க | Which Zodiac Couples That Make The Worst Pair

மீன ராசிக்காரர்கள் மற்றும் மிதுன ராசிக்காரர்களும் வாழ்க்கையை பார்க்கும் விதம் முற்றிலும் வித்தியாசமானது. 

மீன ராசியினர் எப்போதும் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். மேலும் தங்கள் விரும்பிய விடயங்களை முன்கூட்யே கற்பனை செய்து அந்த வாழ்க்கையை அமைத்துக்கொள்ள ஆசைப்படுவார்கள்.

ஆனால் மிதுன ராசியினர் இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். இவர்கள் தங்களின் உள் உணர்வுகளை எளிதில் வெளிப்படுத்தவே மாட்டார்கள். இந்த இரண்டு ராசிக்காரர்களும் ஒன்றாகச் சேர்ந்தால், இருவரில் ஒருவர் நிச்சயம் மன அழுத்தத்துக்கும் ஆளாக நேரிடும்.

துலாம் மற்றும் கும்பம்

இந்த இரண்டு ராசிகளுக்கும் ஒத்தே வராது... தவறியும் திருமணம் செய்திடாதீங்க | Which Zodiac Couples That Make The Worst Pair

கும்ப ராசியில் பிற்நதவர்கள் தங்களின் பேச்சுக்கு மற்றவர்கள் முக்கியத்தும் கொடுக்க வேண்டும் என நினைப்பவர்கள். இவர்கள் சொல்வது மட்டும் தான் சரி என்பதில் உறுதியாக இருப்பார்கள். இவர்களின் சுதந்திரத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்கவே மாடடார்கள்.

ஆனால் துலாம் ராசிக்காரர்கள் அனைத்திலும் மற்றவர்களுக்கு சம உரிமை கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் பழக்கம் கொண்டவர்கள். இவர்கள் திருமண வாழ்க்கையில் துணையை அதிகம் சார்ந்திருப்பார்கள். இந்த இரண்டு ராசியினரும் இணைந்தால் வாழ்க்கை நரகமாகிவிடும்.