ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் கிரகங்களின் தளபதியாக அறியப்படுகிறார். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் சாதகமான நிலையில் இல்லாவிட்டால், அவர்கள் வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

இது நம்பிக்கையாகும். இதன்படி பார்த்தால் கிரகப்பெயர்ச்சி நடைபெறும் போது ஒவ்வொரு ராசிகளின் பலன்களும் மாற்றம் அடைகின்றது. இந்த நிலையில் பிப்ரவரி 24 ஆம் தேதி செவ்வாய் மிதுன ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

இந்த கிரக மாற்றத்தால் சில ராசிகள் பணம் செல்வம் என பல பலன்களை பெறப்போகின்றது. அது யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
  • செவ்வாயின் வக்ர நிவர்த்தியால் மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப்போகிறது.
  • இவர்கள் இதுவரை பெறாத பெரும் லாபத்தை பெறப்போகின்றனர்.
  • இதுவரை ஒஉண்டாகாத நேர்மறையான பல மாற்றங்கள் உண்டாகும்.
  • வேலை செய்யும் இடத்தில் பல விடயங்கள் உங்களுக்கு சாதகமாக நடக்கும்.
கடகம்
  • கடக ராசிக்காரர்கள் இந்த கிரக பெயர்ச்சியால் பல வெற்றிகளை அடையப் போகிறார்கள்.
  • நீங்கள் நிதி நிலையில் பல முன்னேற்றத்தை பெறலாம்.
  • செய்யும் வைலயை விட நல்ல புதிய வேலை கிடைக்கும்.
  • புதிய நிலைச்சொத்துக்கள் வாங்குவீர்கள்.
  • மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள்.
சிம்மம்
  • செவ்வாய் சிம்ம ராசியின் பதினொன்றாவது வீட்டிற்கு நகர்கிறார்.
  • பல நன்மைகளில் குறிப்பாக நிதி நிலையில் பல முன்னேற்றம் உண்டாகும்.
  • நிங்கள் கடன் வாங்கி இருந்தால் அதை கட்டக்கூடிய தொகை வந்து சேரும்.
  • அவர்களின் குழந்தைகளால் சில மகிழ்ச்சியான நிகழ்வுகள் ஏற்படலாம்.
  • வெளிநாடுகளில் வேலை தேடுபவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
ரிஷபம்
  • ரிஷப ராசிக்காரர்கள் இந்த கிரக பெயர்ச்சியால் அபரிமிதமான நன்மைகளை அடையப்போகிறார்கள்.
  • இந்த கால கட்டத்தில் நீங்கள் விரும்பியதை பெறப்போகிறீர்கள்.
  • இதுவரை வாழ்க்கையில் இருந்த பணத்தி் கஷ்டம் இத்துடன் முடிவிற்கு வரும்.
  • இதுவரை பார்க்க ஆசைப்பட்டு நிறைவேறாத பல இடங்களை பார்க்க கிடைக்கும்.
  • நிதியில் உயர்ந்து காணப்படுவீர்கள்.
  • மகிழ்ச்சியான வாழ்க்கை ஆரம்பமாகும் கால கட்டம்