பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரியா சாணக்கியர்.
அவரின் கொள்கைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு பிற்காலத்தில் சாணக்கிய நீதி நூலாக தொகுக்கப்பட்டுள்ளது.சாணக்கியரின் கொள்கைகளுக்கு அன்றும் இன்றும் மவுசு குறையவே இல்லை.
சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் பிரகாரம் வாழ்வில் பணம் நம்மை தேடி வந்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றால் நம்மிடம் நிச்சயம் இருக்க வேண்டிய பழக்கங்கள் குறித்து சாணக்கியர் குறிப்பிடும் முக்கியமான 5 விதிகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
சாணக்கிய நீதியின் அடிப்படையில் வாழ்வில் அதிக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்றால் நமது உணர்வுகள் மீது அதிக கவனம் செலுத்து வேண்டும்.
வாழ்வில் இலக்கை நோக்கி மட்டுமே பயணிக்க வேண்டும். தேவையற்ற உணர்வுகளுக்கு இடம் கொடுத்துவிட்டால், நமது வாழ்க்கையே திசைமாறிப்போய்விடும் என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.
சாணக்கியரின் கருத்துப்படி பணத்தின் மதிப்பு தெரிந்த ஒருவனுக்கு மட்டுமே அதிக பணத்தை உருவாக்க முடியும் என்கின்றார். பணத்தை சம்பாதிப்பதில் மட்டுமலா்லாது அதனை செலவிடும் விதத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
பணத்தை சரியாக வழியில் சம்பாதித்தால், அவர்கள் வாழ்வில் பணம் பெருகிக்கொண்டே போகும். நேர்மையற்ற வழிகளில் வரும் பணம் ஆரம்பத்தில் அதிக மகிழ்ச்சியை கொடுத்தாலும் பிற்காலத்தில் உங்களின் மனநிம்மதியை வேறோடு அழித்துவிடும்.
பணம் உங்களை தேடி வாழ்க்கை முழுவதும் வந்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றால், சேமிப்புக்கு மட்டுமன்றி சரியான முதலீடுகள் மீது கவனம் செலுத்த வேண்டும்.
பணத்தை ஈர்க்க வேண்டும் என்றால் நிச்சயம் நிதி முகாமைத்துவ ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும் என சாணக்கியர் அறிவுறுத்துகின்றார்.
நமது கஷ்ட காலத்தில் பணம் மட்டுமே உதவ முடியும் என்ற அறிவு அதின பணம்தை வாரியிரைக்கும் போது நிச்சயம் இருக்க வேண்டும். பணத்தை செலவு செய்யும் போது தெளிவான சிந்திப்பவர்கள் தான் வாழ்வில் அதிக செல்வத்துக்கு அதிபதியாக மாறுகின்றார்கள்.
சாணக்கியரின் விதிப்படி பணத்தை தர்மம் செய்வது வாழ்வில் செல்வங்களை அதிகரிக்கச் செய்யும் என்று கூறுகிறார். தர்மம் தலை காக்கும் என்று முன்னோர்கள் சொல்லிவைத்திருக்கின்றார்கள்.
நாம் தானமாக கொடுக்கும் பணம் நமது கஷ்டமான நேரங்களில் பல மடங்காக நிச்சயம் திரும்பி வரும் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார். மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் கொண்டவர்கள் வாழ்க்கை முழுவதும் பணத்தையும் செல்வத்தையும் ஈர்க்கின்றார்கள்.
பணத்தைப் புத்திசாலியாகப் பயன்படுத்த தெரிந்தால் பணம் நம்மை தேடி எப்போதும் வந்துக்கொண்டே இருக்கும்.