அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கபப்டுகின்றன. ராசிகள் தவிர, நட்சத்திர பெயர்ச்சி, வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி ஆகிய மாற்றங்களும் ஏற்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
சமீபத்தில் நடந்த சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிக நன்மைகளை அடையவுள்ள ராசிக்காரர்கள் யார் யார் என நாம் இங்கு பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். நிதி நன்மைகளையும் பெறுவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமான நடந்துமுடியும். மேலும், புதிய வீடு அல்லது புதிய வாகனம் வாங்கும் கனவு நிறைவேறும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் உங்களுக்கு நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு, சனியின் நட்சத்திர பெயர்ச்சி மற்றும் மார்ச் மாதம் நடக்கவுள்ள சனி பெயர்ச்சி ஆகியவை வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும். இந்த ராசிக்காரர்கள் அனைத்து பணிகளிலும் வெற்றி பெறுவார்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வருமானத்திற்கான பல வழிகள் திறக்கும். வியாபாரத்திலும் பெரிய லாபம் கிடைக்கக்கூடும். அலுவலக பணிகளில் வேலை செய்பவர்களின் வருமானம் அதிகரிக்கும். நிதி நிலைமை வலுவாக இருக்கும்.
கும்பம்
சனி நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் கும்ப ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். கும்ப ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடையும். வருமானத்தில் அதிகரிப்பு இருக்கலாம். வாழ்க்கையில் நீண்ட காலமாக இருந்து வரும் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குடும்பத்துடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும்.
மீனம்
சனி நட்சத்திர பெயர்ச்சியும், மார்ச் மாதம் நடக்கவுள்ள சனி பெயர்ச்சியும் மீன ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை அளிக்கும். இவர்களது வாழ்க்கையில் வெற்றி மழையாய் பொழியும். மகிழ்ச்சியும் செல்வமும் அதிகரிக்கும். பண வரவு அதிகமாகும். வருமானம் அதிகரிக்கும். திடீர் பண வரவு இருக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.