ஒருவர் பிறக்கும் ராசி, நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே எளிதில் பொறுமை இழக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
அப்படி விரைவில் தங்களின் கட்டுப்பாட்டை உடைத்தெறியும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனின் ஆதிபதியாக இருப்பதால் இவர்கள் ஆடம்பர வாழ்க்கை மீது அதீத மோகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இயல்பாகவே நீதி நேர்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள், பார்ப்பதற்கு அமைதியாகவும் பொறுமையாக இருப்பது போல் தோன்றினாலும் விரைவில் பொறுமை இழப்பவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசியினரை யாராவது புறக்கணித்தால், அல்லது அச்சுறுத்துவது போல் நடத்துக்கொண்டால், தங்களின் கட்டுப்பாட்மை மீறி உணர்ச்சிவசப்பட்டுவிடுவார்கள்.
மிதுனம்
மிதுன ராசியினர் இயல்பாகவே தங்களின் உணர்வுகளை மற்றவர்களிடமிருந்து மறைத்து வைக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் கடினமான சூழ்நிலைகளில் அமைதியாக இருக்க நினைத்தாலும் இவர்களின் குணம் விரைவில் பொறுமையை இழக்கச் செய்துவிடுகின்றது.
மிதுன ராசியினரை தேவையின்றி தொந்தரவு செய்தால் அவர்களின் கோர முகத்தை எதிரிகள் சந்திக்க வேண்டியிருக்கும்.இவர்களுக்கு பொறுமை என்பதே சுத்தமாக கிடையாது.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் தங்களின் இலக்கை அடைவதில் தீவிர ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் செய்ய நினைத்த விடயங்களை உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
தாங்கள் நினைத்த வேலை சரியாக நடக்காவிட்டால் இவர்கள் பொறுமையிழந்து அதிமாக எரிச்சலடைய ஆரம்பித்துவிடுவார்கள்.