ஒருவர் பிறப்பெடுக்கும் ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவான தாக்கத்தை கொண்டிருக்கும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே பெண்களை விரைவில் ஈர்க்கக்கூடிய வசீகர தோற்றத்தையும் ஆளுமையையும் கொண்டிருப்பார்கள்.
அப்படி முதல் பார்வையிலேயே பெண்களை மயக்கிவிடும் ஆற்றல் கொண்ட ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே பெண்களை கவரும் வகையில் ஆண்மையை வெளிப்படுத்தும் கம்பீரமாக உடல் தோற்றத்தை கொண்டிருப்பார்கள்.
இவர்களின் அசாத்திய தைரியம் மற்றும் சாகச மனப்பான்மை பெண்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கின்றது. இவர்களை ஒருமுறை பார்த்தால் மறுமுறை திரும்பி பார்க்கும் அளவுக்கு அழகானவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் புன்னகைக்கு மயங்காத பெண்களே இருக்கமுடியாது.அவர்களின் அச்சமற்ற குணம் பெண்களை வசீகரிக்கும் வகையில் இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்த ஆண்கள் நீதி நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசி ஆண்கள் இயற்கையாகவே அழகிய முகம் மற்றும் உடல் தோற்றம் கொண்டவர்களாக இருப்பதால் முதல் பார்வையிலேயே பெண்களை வசீகரிக்கின்றார்கள்.
இவர்களின் ஆளுமை மற்றும் நேர்மையான குணம் எந்த பெண்ணையும் இவர்கள் மீது ஈர்ப்பு கொள்ள செய்துவிடுகின்றது.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்த ஆண்கள் மற்றவரை்களால் தவிர்க்க முடியாத வசீகர தோற்றத்தை கொண்டிருப்பார்கள்.
ஆண்களே இவர்களை பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு கம்பீரமான உடல் தோற்றம் இவர்களுக்கு இருக்கும்.
இவர்களின் பார்வையில் இருக்கும் காந்த சக்தி எந்த பெண்ணையும் விரைவில் ஈர்க்கும் வகையில் இருக்கும். இந்த ராசி ஆண்களை பெரும்பாலும் எல்லா பெண்களுக்கும் பிடிக்கும்.