அனைத்து கிரகங்களிலும் சனி பகவான் மிக மெதுவாக நகர்வதால் ராசிகளில் அவரது தாக்கமும் அதிகமாக உள்ளது. பெப்ரவரியில் நடக்கவுள்ள சனி நட்சத்திர பெயர்ச்சி மற்றும் மார்ச் மாதம் நடக்கவுள்ள சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிக்காரர்கள் யார் யார் என நாம் இங்கு பார்ப்போம்.

சனி பெயர்ச்சியால் நல்ல யோகங்களை பெற போகும் ராசிக்காரர்கள் | Sani Peyarchi Yogam Perum Rasi Today Astrology

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பகவான் மகிழ்ச்சியைப் பொழிவார். உங்கள் ஜாதகத்தில் சனி மற்றும் குருவின் நல்ல நிலை காரணமாக, வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான நல்ல வாய்ப்புகள் இருக்கும். வீடு கட்டும் திட்டங்கள் அல்லது சொத்து பரிவர்த்தனைகள் அனுகூலமாக அமையும். வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

சனி பெயர்ச்சியால் நல்ல யோகங்களை பெற போகும் ராசிக்காரர்கள் | Sani Peyarchi Yogam Perum Rasi Today Astrology

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாத சனி பெயர்ச்சியும், மார்ச் மாதம் நடக்கவுள்ள சனி நட்சத்திர பெயர்ச்சியும் அனுகூலமான நன்மைகளை அளிக்கும். இதன் தாக்கத்தால், நிலம், வாகனம் மற்றும் வீடு வாங்க/விற்க எண்ணம் கொண்டவர்களின் எண்ணம் நிறைவேறும். சனி அருளால் 2025 ஆம் ஆண்டு கடக ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். வேலையில் போனஸ் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. இது செல்வத்தை அதிகரிக்கும். முதலீடு செய்வது லாபகரமானதாக இருக்கும். சனி பகவானின் ஆசிர்வாதத்தால், உங்கள் செல்வமும் புகழும் அதிகரிக்கும்.

சனி பெயர்ச்சியால் நல்ல யோகங்களை பெற போகும் ராசிக்காரர்கள் | Sani Peyarchi Yogam Perum Rasi Today Astrology

கன்னி

சனி பகவான் பிப்ரவரி 2025 இல் குருவின் நட்சத்திரத்தில் பெயர்ச்ச்சி ஆகிறார். இது கன்னி ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்களை அளிக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பண வரவு அதிகமாகும். தொழிலில் பணத்தை முதலீடு செய்வது மங்களகரமானதாகவும் பலனளிப்பதாகவும் இருக்கும்.

சனி பெயர்ச்சியால் நல்ல யோகங்களை பெற போகும் ராசிக்காரர்கள் | Sani Peyarchi Yogam Perum Rasi Today Astrology

துலாம்

துலா ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சி மற்றும் சனி பெயர்ச்சி அனுகூலமான பல நன்மைகளை அளிக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கும். பல வித வெற்றிகளை காண்பீர்கள். மனதை வாட்டி வந்த தொல்லைகள் தீரும். பல நல்ல செய்திகளை பெறுவீர்கள்.

சனி பெயர்ச்சியால் நல்ல யோகங்களை பெற போகும் ராசிக்காரர்கள் | Sani Peyarchi Yogam Perum Rasi Today Astrology

மகரம்

மார்ச் மாதத்திற்குப் பிறகு மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல நேரம். சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் இந்த காலகட்டத்தில் வாகனம் வாங்குவதில் இருந்து வந்த தடைகள் நீங்கும். இந்த ஆண்டு, சொத்து சேர்ப்பதில் வெற்றி பெறுவீர்கள். பொருளாதார நிலை மேம்படும். வாழ்க்கை இன்பமாக இருக்கும்.  

சனி பெயர்ச்சியால் நல்ல யோகங்களை பெற போகும் ராசிக்காரர்கள் | Sani Peyarchi Yogam Perum Rasi Today Astrology