ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட குணங்கள் ஆகியவற்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் மற்ற ஆண்களுடன் ஒப்பிடுகையில் சிறந்த காதலனாக இருப்பார்களாம். இவர்கள் துணையை தங்களின் உலகமாக பார்க்கும் குணம் கொண்டவர்களாம்.
அப்படி காதல் செய்வதில் கில்லாடிகளாக திகழும் ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே அதிகமாக உணர்ச்சிவசப்படும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் காதல் மற்றும் திரமண வாழ்க்கை மீது அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பதுடன் காதல் மீது மரியாதை உணர்வு கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களுக்கு நிச்சயித்து திருமணம் செய்துக்கொள்வதில் உடன்பாடு இருக்காது. துணையை முழுமையாக புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
இந்த ராசியினர் தங்களின் காலிக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய ஆற்றல் கொண்டவர்களாகவும் அதீத அன்பு கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே மற்றவர்களை வசீகரிக்கும் உடல் தோற்றத்தை கொண்டிருப்பார்கள்.
இவர்கள் காதல் உட்பட அனைத்து விடயங்களிலும் மிகவும் நேர்மையாகவும் விசுவாசமாகவும் நடிந்துக்கொள்வார்கள்.
இவர்கள் ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று முடிவு செய்து விட்டால், அந்த நபருக்கு தங்களின் ஒட்டுமொத்த அன்பையும் கொடுப்பார்கள்.
அவர்களை காதல் செய்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றே சொல்ல வேண்டும். காதலில் இந்த ராசியினரை மிஞ்சுவதற்கு யாரும் இல்லை என்பது போல் முழுமையான காதல் உணர்வை கொடுப்பார்கள்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் இரட்டை ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள்.இவர்கள் தங்களிகன் உள்ளுணர்வை நெருக்கமானவர்களிடம் மட்டுமே பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.
காதல் விடயத்தில் மிகவும் அக்கறை காட்டும் இவர்கள் துணையின் மகிழ்ச்சிக்காக எதையும் செய்ய தயாராக இருப்பார்கள்.
இவர்கள் தங்களின் கோபத்தைத் தாங்கிக்கொள்ளும் துணையை மட்டுமே திருமணம் செய்ய ஆசைப்படுவார்கள்.
காதல் செய்யும் முன்னர் பல முறை சிந்திக்கும் இவர்கள் அதன் பின்னர் காதலுக்காக உயிரையும் கொடுக்க தயாராகிவிடுவார்களாம்.