நமது முன்னோர்கள் பல விடயங்களை நடக்கு ஏதோ ஒரு வழியில் கற்றுத்தந்துள்ளனர். கடவுளாக போற்றும் பல தர்ம நுல்களில் பல அறக்கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.
அதிலும் மிகவும் பழமையானது தான் கருட புராணம். இதில் நமது மத நூல்களில் வாழ்க்கை மேலாண்மை தொடர்பான பல குறிப்புகள் கூறப்பட்டுள்ளன.
நமது எந்தத் தவறுகள் பண இழப்புக்குக் காரணமாக அமையும் என்பதும் இதில் எழுதப்பட்டுள்ளது. அதிலும் நாம் வீட்டில் செய்யும் மிகவும் முக்கியமான 3 விடயம் பண அழப்பிற்கு வழிவகுக்குமாம் அது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இரவிரல் சாப்பிட்ட பாத்திரங்களை கழுவாதிருத்தல் |
இரவில் சாப்பிட்ட பாத்திரங்களை பெரும்பாலானோர் கழுவதில்லை. அதை அப்படியே வைத்து விட்டு நித்திரைக்கு சென்று விடுவார்கள். இது முற்றிலும் தவறு. இது ஒரு அழுக்கான விடயம் என்பதால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் பரவுகிறது. இதன் காரணமாக இந்தக்களின் நம்பிக்கை படி லட்சுமி தேவியும் அத்தகைய வீட்டை உடனடியாக விட்டு வெளியேறிவிடுவார்என்பத நம்பிக்கை. இந்த தவறை செய்பவர் எப்படியான பணக்காரராக இருந்தாலும் அவரிடம் காசு தங்காது. |
வீட்டை எப்போதும் அழுக்காக வைத்திருப்பது |
கருட புராணத்தின்படி வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். இப்படி செய்யாவிட்டால் விரைவில் ஏழையாகிவிடுவார்கள். ஏனென்றால் லட்சுமி தேவி அத்தகைய வீட்டில் அதிக நேரம் அங்கு வாசம் செய்ய மாட்டாள் என கூறப்படுகின்றது. எனவே கஷ்டப்பட்டு உழைக்கும் பணம் அப்படியே இருக்க வேண்டும் என்றால் வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். |
வீட்டில் குப்பைகளைக் குவிப்பது |
கருட புராணத்தின்படி, தங்கள் வீட்டில் குப்பைகளைக் குவித்து வைப்பவர்கள், அதாவது தேவையற்ற பொருட்களைக் கூட சேமித்து வைப்பவர்கள். குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படுவது சகஜம், இதனால் எதிர்மறை ஆற்றல் பரவுகிறது. லட்சுமி தேவியும் அத்தகைய வீட்டில் தங்குவதை விரும்புவதில்லை. அதனால் உங்கள் வீட்டிலும் அத்தகைய பொருட்கள் இருந்தால், அவற்றை உடனடியாக அகற்றுங்கள் |