ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்விலும், விசேட ஆளுமைகளிலும் பல்வேறு வகையிலும் ஆதிக்கம் செலுத்தும் என தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியினர் இயல்பாகவே காதல் விடயங்களில் அதிக ஈடுபாடு மற்றும் அதீத மோகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அப்படி இவர்களை விட சிறப்பாக காதலிப்பதற்கு யாராலும் முடியாது என்பது போல் காதல் செய்யும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், காதல் விடயங்களில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் யார் மீது பாசம் வைத்தாலும் அவர்களுக்கான எந்த எல்லைக்கும் செல்ல கூடிய குணத்தை நிச்சயம் கொண்டிருப்பார்கள்.
இவர்கள் காதல் என்று வந்துவிட்டால், துணைக்கு மிகவும் உண்மையாகவும் ,நேர்மையாகவும் நடந்துக்கொள்வார்கள்.
துலாம்
துலாம் ராசியினர் இயல்பாகவே தன்னை சுற்றி இருப்பவர்களை கலகலப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
குறிப்பாக காதல் செய்வதையும் மற்றவர்களால் காதலிக்கப்படுவதையும் அதிகம் விரும்பும் குணம் இவர்களிடம் இருக்கும்.
இவர்கள் துணைக்கு சம உரிமை கொடுப்பவர்களாகவும் மதிப்பளிப்பவர்களாகவும் இருப்பார்கள். காதல் செய்வதில் இவர்களை மிஞ்சுவதற்கு ஆளே இல்லை என்பது போல் இருப்பார்கள்.
மீனம்
மீன ராசியில் பிறந்தவர்கள் தன்னலம் அற்ற குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் காதல் செய்பவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதில் உருதியாக இருப்பார்கள்.
பிறரை நன்றாக புரிந்து கொள்ளும் தன்மை இவர்களிடம் சற்று அதிகமாகவே இருக்கும் அதனால் தங்களின் துணையின் எண்ணங்களை சொல்லாமலேயே புரிந்துக்கொண்டு நிறைவேற்றுவார்கள்.
இவர்கள் கற்பனை வலம் அதிகம் கொண்டவர்களாக இருப்பதால், தங்களின் காதல் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே ரசித்து கற்பனை செய்து அதன் படி வாழ்கை நடத்துவார்கள்.