வேத சாஸ்திரங்களின் படி ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சியும் ஒவ்வொரு ராசிக்கும் முக்கியமாகும். நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன்.
இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
இவர் மாதம் ஒருமுறை தனது இடத்தை மாற்றிக்கொள்வார். இந்த நிலையில் ஜனவரி தாதம் 28 த் திகதி சுக்கிரன் மீன ராசிக்குள் நுழைகிறார். இதன் இவ்வாண்டின் முதல் தாளவிய் யோகம் உருவாகும்.
மாளவ்ய ராஜயோகமானது மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், மங்களகரமானதாகவும் ஜோதிடத்தில் கருதப்படுகிறது.
இந்த ராஜயோகமானது சுக்கிரன் சொந்த ராசியான ரிஷபம் மற்றும் துலாம் ராசியிலும், கேந்திர வீடுகளிலும் இருக்கும் போது உருவாகிறது. மாளவ்ய ராஜயோகம் உருவாவதால், ஒருவர் செல்வம், மகிழ்ச்சி, செழிப்பை பெறுவார்கள்.
ரிஷபம் |
- ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.
- பல நல்ல விஷயங்கள் சாதகமாக அமையும்.
- பணத்தின் வரவில் நல்ல உயர்வு கிடைக்கும்.
- எடுத்துக்கொண்ட வேலையில் வெற்றி கிடைக்கும்.
- புதிய வீடு வாகனம் வாங்குவதில் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.
|
தனுசு |
- தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.
- வாழ்க்கையில் பல வசதிகள் உங்களை வந்து கட்டாயமாக சேரும்.
- பரம்பரை சொத்துக்களைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
- பல நாள் அசைகள் இருந்தால் உங்களுக்கு இந்த கால கட்டத்தில் நிறைவேற வாய்ப்பு உள்ளது.
- சிலருக்கு புதிய வாகனம், வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
|
கும்பம் |
- கும்ப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்று மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார்.
- இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
- உங்களை சுற்றியுள்ள சமூகத்தில் நல்ல மரியாதை கிடைக்கும்.
- பேச்சால் பல காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
- குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- இந்த கால கட்டத்தில் பணக்காரராக வாய்ப்பு அதிகம் காணப்படும்.
|