சம்மர் சீசனுக்கு வெயில் அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் ஜில்லென்று  ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்று ஆசை வருவது பொதுவானது.

பொதுவாக இதற்கு வீட்டில் இருக்கும் குழந்தைகள் அடம்பிடிப்பார்கள். ஆனால் எப்போதும் கடையில் ஐஸ்கிறீம் வாங்கி சாப்பிடுவது நல்லதல்ல.

எனவே வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்களை வைத்தே எப்படி டேஸ்டியான ஐஸ்கிரீம்கள் தயாரிப்பது? என்பதை தெரிந்து கொண்டால் ஒவ்வொரு நாளும் ஐஸ்கிறிம் சாப்பிடலாம்.

அந்த வகையில் பிஸ்கட் பாக்கெட்டை வைத்து எப்படி சுவையான சாக்லேட் ஐஸ்கிரீம் தயாரிப்பது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

அடிக்கிற வெயிலுக்கு ஐஸ்கிரீம் சாப்பிடணுமா? வீட்டில் செய்ய 2 பிஸ்கட் பக்கெட் இருந்தா போதும் | Home Made Chocolate Biscuit Icecream In Tamil Food

தேவையான பொருட்கள்

  • ஃபுல் கிரீம் பால் – 1/2 லிட்டர்
  • சாக்லேட் பிஸ்கட் – 2 பாக்கெட்
  • சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

சாக்லேட் பிஸ்கட் ஐஸ்கிரீம் செய்வதற்கு முதலில் சாக்லேட் பிஸ்கட்கள் தேவை. எனவே  ரெண்டு பெரிய பாக்கெட் சாக்லேட் பிஸ்கட்டுகளை முழுதாக பிரித்து ஒரு மிக்ஸியில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அடிக்கிற வெயிலுக்கு ஐஸ்கிரீம் சாப்பிடணுமா? வீட்டில் செய்ய 2 பிஸ்கட் பக்கெட் இருந்தா போதும் | Home Made Chocolate Biscuit Icecream In Tamil Food

பின் அதனுடன் சர்க்கரை சேர்த்து பவுடர் போல அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் அடிகனமான பாத்திரம் ஒன்றை வைக்க வேண்டும்.

அதில் அரை லிட்டர் அளவிற்கு ஃபுல் கிரீம் மில்க் சேர்க்க வேண்டும். பால் கொதித்து கெட்டியாக துவங்கியதும், நீங்கள் தயார் செய்து வைத்துள்ள பவுடர் கலவையை சேர்த்து அதை கிண்டி விடுங்கள். ஒருபோதும் அடிப்பிடிக்க வைக்க கூடாது.

எனவேஅடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து கிண்டி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும். பின்பு அடுப்பை அணைத்து ஆற விட வேண்டும்.

அடிக்கிற வெயிலுக்கு ஐஸ்கிரீம் சாப்பிடணுமா? வீட்டில் செய்ய 2 பிஸ்கட் பக்கெட் இருந்தா போதும் | Home Made Chocolate Biscuit Icecream In Tamil Food

நன்கு ஆறியதும் மீண்டும் அதே மிக்ஸியில் அக்கலவையை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்து எடுத்ததை ஒரு காற்று புகாத பிளாஸ்டிக் டப்பாவில் ஊற்றி அதன் மீது பாலிதீன் கவர் அல்லது ஃபாயில் பேப்பர் வைத்து இறுக்கமாக மூடி ஃப்ரீசரில் வைக்க வேண்டும்.

இதை இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் அப்படியே ஃப்ரீஸ் செய்வது அவசியம். பின்னர் மறுபடியும் அதனை எடுத்து மிக்ஸியில் சேர்த்து மென்மையாக அரைக்க வேண்டும்.

அடிக்கிற வெயிலுக்கு ஐஸ்கிரீம் சாப்பிடணுமா? வீட்டில் செய்ய 2 பிஸ்கட் பக்கெட் இருந்தா போதும் | Home Made Chocolate Biscuit Icecream In Tamil Food

இதன் பின்னர் கடைகளில் கிடைக்கும் கெட்டியான டேஸ்டியான ஐஸ்கிரீம் போல நமக்கும் கிடைக்கும். மீண்டும் அரைத்ததும் இந்த கலவையை குல்பி மோல்டுகள் அல்லது குட்டி குட்டி டம்ளர்களில் உங்களுக்கு எப்படி பிடிக்குமோ அப்படி வைத்து குளிர்பெட்டியில் வைத்துவிட்டு எடத்து உண்ணலாம்.