பொதுவாக அனைவருக்குமே வாழ்வில் மகிழ்சியாகவும் மன நிம்மதியுடனும் இருக்க வேண்டும் என்று தான் ஆசை இருக்கும்.

ஆனால் அனைவராலும் இப்படி வாழ்ந்து விட முடிவதில்லை. நீங்கள் உண்மையான அமைதியை தேடுபவராக இருந்தால், அதற்கு உங்களுக்கு மன அழுத்தத்தை கொடுப்பவர்களையும் ஈகோ பிழடித்தவர்களையும்  இலகுவாக சமாளிக்கும் கலையை அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

ஈகோ பிடித்தவர்களை சமாளிக்க கஷ்டப்படுறீங்களா? இதை செய்தாலே போதும் அடங்கிவிடுவார்கள் | How To Handle A Egoistic Person Easily

அப்படி பிறரின் கோபத்தை தூண்டிவிட்டு மன அழுத்தத்தை கொடுக்கும்  தலைகனம் பிடித்தவர்கள்களை எவ்வாறு சமாளிப்பது என இந்த பதிவில் அறிந்துக்கொள்ளலாம்.

ஈகோ பிடித்தவர்கள் எப்போதும் மற்றவர்களை பர்சனல் ஆக தாக்கி கோபப்படுத்த வேண்டும் என்பதில் குறியாக இருப்பார்கள். அது மட்டுமன்றி தாங்கள் செய்யும் அனைத்தும் சரி என்ற மமதை அவர்களிடம் அதிகமாக இருக்கும்.

ஈகோ பிடித்தவர்களை சமாளிக்க கஷ்டப்படுறீங்களா? இதை செய்தாலே போதும் அடங்கிவிடுவார்கள் | How To Handle A Egoistic Person Easily

எனவே, ஈகோ பிடித்தவர்கள்  ஏதேனும் உங்களை தூண்டிவிடுமாறு பேசினால் அதற்கு நீங்கள் அமைதியை பரிசளியுங்கள். அதனால் அவர்கள் நினைத்த விடயத்தை சாதிக்க முடியாமல் தடுமாறுவார்கள். 

அவர்கள் பேசுவதற்கு இதற்கு ஏதேனும் ரியாக்ட் செய்தால் அது அவர்களின் ஈகோவிற்கு மேலும் நாம் விருந்து கொடுப்பது போல் ஆகும்.

ஈகோ பிடித்தவர்களை சமாளிக்க கஷ்டப்படுறீங்களா? இதை செய்தாலே போதும் அடங்கிவிடுவார்கள் | How To Handle A Egoistic Person Easily

தான் என்ற மமதையில் இருப்பவர்பள் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்த உரிய நேரத்துக்காக காத்துக்கொண்டே இருப்பார்கள். 

அப்படி ஈகோ அதிகம் கொண்டவர்களுக்கு நாம் பேசும் வாய்ப்பை கொடுக்க வில்லை என்றாலே போதும் அவர்களின் ஆட்டம் முடிவுக்கு வந்துவிடும்.

ஈகோ பிடித்தவர்களை சமாளிக்க கஷ்டப்படுறீங்களா? இதை செய்தாலே போதும் அடங்கிவிடுவார்கள் | How To Handle A Egoistic Person Easily

இவ்வாறு அமைதியைாக கடந்து செல்லும் போதும் கூட பிரச்சினையை தூண்டும் வகையில் கூறிய வார்த்தைகளால் உங்களை மீண்டும் மீண்டும் தாக்க முற்படலாம். இருப்பினும் நீங்கள் கொஞ்சம் சிரமப்பட்டாவது அமைதியாக இருந்துவிட்டால் நீங்கள் தான் வெற்றியடைந்ததாக அர்த்தம்.

 ஈகோ பிடித்த ஒருவருடன் பேசுவது உங்களையும் டாக்ஸிக் ஆக மாற்றும் எனவே, அவரிடம் தேவைப்பட்டால் மட்டும் பேச வேண்டும். இந்த பழக்கத்தை கடைப்பிடித்தால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.